பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளவியல்-நூற்பா உடு 2. డ్రీ

உதாரணம் : 'பொழுது மெல்லின்று’ (குறுந். 161) என்பதனுட் புதல்வற் புல்லி அன்னா’ என்று தலைவியை விளித்தது களவின் அரற்றலாயிற்று.

அரற்றல், இன்னதோர் இன்னாக்காலத்து என் செய்கின்றா யெனக் காதல்பற்றி இரங்குதல்,

தோழியை வினவலும் நின்றோழிக்கு இவ் வேறுபாடு எற்றினா னாயிற் றென்றாற்போலத் தோழியை வினாவுதலும்:

உ-ம்: 'நெடுவே லேந்தி நீயெமக் கியாஅர்

தொடுத லோம்பென வரற்றலு மரற்றும் கடவுள் வேங்கையுங் காந்தளு மலைந்த தொடலைக் கண்ணி புரியலு மென்னும் பாம்புபட நிவந்த பயம ைஒத் தடக்கைப் பூம்பொறிக் கழற்கா லாஅய் குன்றத்துக் குறுஞ்சுனை மலர்ந்த குவளை நாறிச் சிறுதேன் கமழ்ந்த வம்மெல் லாகம் வாழியெம் மகளை யுரைமதி இம்மலைத் தேம்பொதி கிளவியென் பேதை யாங்கா டினளோ நின்னொடு பகலே’

எனவரும்.

இது செவிலி தோழியை வினாயது.

ஓங்குமலை நாட வொழிகநின் வாய்யை காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி உறுபகை பேணா திரவின் வந்திவள் பொறிகிள ராகம் புல்லத் தோள் சேர் பறுகாற் பறவை யளவில மொய்த்தலின் கண்கோ ளாக நோக்கிப் பண்டு அறினையை யோவென வினவினள் யாயே யதனெதிர் சொல்லா ளாகி அல்லாந் தென்முக நோக்கி யோளே யன்னா