பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா உடு 色_9_阪,

வருமுலை வெப்பங் கொழுநற் போற்றிய சென்றனள் அம்மநின் தோழி யவனோ டென்றினி வரூஉம் என்றனள் வலந்துரை தவிர்ந்தன் றலர்ந்த ஆரே.’’

இது, செவிலி கற்பினாக்கத்து நின்றமை தோழி கூறியது.

பிரிவின் எச்சத்தும் - தலைவி உடன்போயவழித் தான் பின் செல்லாதே எஞ்சுதலும் உளவாதலின் ஆண்டுக் கூறுவனவும்:

உ-ம்: தெறுவ தம்ம நும்மகள் விருப்பே

உறுதுயர் அவலமொ டுயிர்செலச் சாஅய்ப் யாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க நாடிடை விலங்கிய வெற்பிற் காடிறந் தனள் நம் காத லோளே." (ஐங்குறு.313)

இது, பின்செல்லாது வருந்தியிருந்த செவிலியைக் கண்ட நற்றாய் கூறியது.

இது, நற்றாய் கூற்றாய்ச் செவிலி மேன ஆயிற்று. மகள் நெஞ்சு வலிப்பினும் - உடன்போக்கிற்கு மகள் நெஞ்சு துணியினும்:

தன்மேல் அன்பு நீங்கியது உணர்ந்து செவிலி கூறும்.

உ-ம்: பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றனன்

இனிய நிந் தேனது துனியா குதலே கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில் வேங்கையுங் காந்தளும் நாறி யாம்பன் மலரினுந் தான்றண் ணியளே.” (குறுந்:84)

என வரும்.

இருபாற் குடிப்பொருள் இயல்பின்கண்ணும் - தலைவனுந் தலைவியுந் தோன்றிய இருவகைக் குடியும் நிரம்பி வருதல் இயல்பாகப் பெற்ற வழியும்:

1. இருபாற் குடிப்பொருள் என்றது, பிறப்பு. குடிமை ஆண்மை, ஆண்டு, உருபு, உருவுகிறுத்த காம வாயில், நிறை, அருள், உணர்வு, திரு எனத் தலைவன் தலைவி இருவர் க்கும் உரியவாகச் சொல்லப்பட்ட ஒப்புப் பத்தினையும்,