பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

දී.ඞී. ඡී தொல்காப்பியம் - பொருளதிகாரம்

உசு. தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே

இளம் பூரணம்

இது நற்றாய்க்கு உரியதோர் இலக்கணமுணர்த்துதல் துதலிற்று.

(இ -ள்,) செவிலியுணர்வோடு உடம் பட்ட வுள்ளத்தளாயின், நற்றாய்க்கும் மேற்சொல்லப்பட்டவை யெல்லாம் வரையப் படா வென்றவாறு.

உணர்வுடம் படுதலாவது-தலைவியை யுற்று நோக்கம் நிகழ்ந்தவழி பன்றித் தானும் செவிலியைப்போல உற்று நோக்கா ளென்று கொள்க. இப்பொருள் மேற் கிளவி வருவன உளவேனுஞ் செவிலியைப்போல வொருப்பட்ட வுள்ளத்தளாயின் அவள் கண்னும் இக்கிளவியெல்லாம் நிகழும் என்றவாறு உடம் படாதவாறு என்னை யெனின், யாரிடத்தும் மக்களை வளர்ப்பார் செவிலியராகலானும் தமக்குத் தம் இல்லறநிலைக்குக் கடவ பகுதியான அறனும் பொருளும் இன்பமும் வேண்டுதலானும் கூற்றொடு வேறுபாடு தோன்றாது. (உசு) நக் சினார்க்கினியம்

இது, செவிலிக்கு உரியன கூறி நற்றாய்க்கு உரிய கூற்றுக் கூறுகின்றது.

(இ -ள்.) உணர்வு உடம்படின் அங்ங்னஞ் செவிலி உணர்ந்தாங்கே நற்றாயும் மதியுடம்படில், தாய்க்கும் வரையார்-நற்றாய்க்கும் முற்கூறிய பதின்மூன்று கிளவியும் பிறவுமாகக் கொண்டு எடுத்து மொழிதல் வரையார் (எ . து.

"தாய்க்கும்’ என்றார், இவட்கு அத்துணை பயின்றுவாரா என்றற்கு. அது நற்றாய் இல்லறம் நிகழ்த்துங் கருத்து வேறு உடைமையின் உற்றுநோக்காள்; செவிலியே தலைவியை உற்று நோக்கி ஒழுகுவாளாதலின், இலக்கணமுண்மையின் இலக்கியம்' வந்துழிக் காண்க', {字酶具

- * ,- - - * * * * х > - یار ;-س : جای ماهی ز 1. செவிலிக்குரிய கூற்றுக்கள் கற்றாய்க்கும் உரிய எனத் தொல்காப்பியக்

கூறுதலால் கற்றாய் கூற்றாக வந்த இலக்கியங்கள் இருந்திருத்தல் வேண்டும் எனவும், அங்கனம் வரும்வழி அவற்றை இலக்கியமாகக் கொள்க எனவும்

கூறியவாறு,