பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ2.அ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

(இ - ள்.) கிழவோன் அறியா அறிவினள் இவளென ஐயக் கிளவி - நங்குலத்திற்கு ஒத்த தலைவனை அறிந்து கூடாத அறி வினையுடையள் இவளென்று தம் மனத்தை ஐயமுற்றும் பிற ரோடு உசாவுங் கிளவியை, மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங் கின் அறிதலும் உரித்தே குற்றமற்ற சிறப்பினையுடைய அந்த ணர் முதலியோரிடத்தே கூறி அதுவும் முறைமையென்று அவர் கூற அறிதலும் உரித்து (எ று).

என்றது, மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே என முற் கூறினமையின் தலைவன் தன் குலத்தின் உயர்ந்தமை அறிந்த விடத்து, இங்ங்னம் கூடுதல் முறையன்றென்று ஐயுற்ற செவிலி யும் நற்றாயும், உயர்ந்தோரைக் கேட்டு இதுவுங் கூடுமுறைமை என்றுணர்வர் என்பதாம். இலக்கணமுன்மையின் இலக்கியமும்

உசு)

{

அக்காலத்து உளவென்றுணர்க."

ஆய்வுரை

இது, நற்றாயும் செவிலியும் தலைமகளது ஒழுகலாற்றை ஐயுற்றுத் துணியுமாறு கூறுகின்றது.

(இ - ள்.) தலைமகன் அறியா அறிவினையுடையாள் இவள்' என்று குற்றம் அறுத்த சிறப்பினையுடைய உணர்ந்தோர் பக்கத்து உளதாகிய ஐயக் கிளவியால் தலைவனோடு தலைவிக்குளதாகிய புணர்ப்பினை யறிந்துகொள்ளுதல் செவிலிக்கும் நற்றாய்க்கும் உரியது. எ-று.

தலைவியின் மெலிவினைக் கண்டு வருந்திய செவிலியும் நற்றாயும் குற்றமற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோராகிய அறி. வரைப் பணிந்து தம் மகளது மெலிவு எதனாலாயிற்று என வினவி நிற்பர். அந்நிலையில் முக்கால நிகழ்ச்சிகளையும் ஒருங்குனரும் நுண்ணுணர்வுடைய அப்பெரியோர்கள் இவள் இத்தன்மையான்

1. கிளவோன் அறியா அறிவிள்ை இவள்' என உயர்ந்தோர் கூறும் கூற்று, இருபொருள்படக் கவர்த்து கிற்றலின் ஐயக் கிளவியாயிற்று.

2. இனி, இதனைச் செவிலியும் கற்றாயும் தம் உள்ளத்து ஐயுற்று: உயர்ந்தோரை வினவிய கிளவியாகக் கொண்டார் கச்சினார்க்கினியர். இவ்வாறு ஐயுற்று வினவுவதாக இலக்கியம் காணப்படவில்லை. ஆயினும் 'இலக்கண முண்மையின் இலக்கியமும் அக்காலத்து உளவென்று உணர்க' என்றாா,