பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்ல் தொல்காப்பியம்-பெர்ருளதிகாரிம்

தச்சினார்க்கினியம்

இது தலைவிக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ- ள்.) பிறநீர் மாக்களின் வேறுவேறாகத் தம்மில் தாம் காதல்செய்து ஒழுகும் அறிவில்லாதாரைப் போல; கிழவன் அறியத் தன்னுறு வேட்கை முற்கிளத்தல் கிழத்திக்கு இல்லை தலைவன் அறியும்படியாகத் தனக்குற்ற வேட்கையை அவன் முன்னர்க் கூறுதல் தலைவிக்கு இல்லை; ஆயிடை - அங்கனங் கூற்றில்லாதவிடத்து; எண்ணுங் காலையும்-அவள் வேட்கையை அவன் ஆராயுங்காலையும்; பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப - அவ்வேட்கை புதுக்கலத்து பெய்த நீர் புறத்துப் பொசிந்து காட்டுமாறுபோலும் உணர்வினை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் (எ - று) .

  • கிழத்திக்கில்லை யெனவே தோழிக்குத் தலைவி தனது வேட்கையை எதிர்நின்று கூறுதலுளதென்பது பெற்றாம். தலை விக்குக் குறிப்பானன்றித் தலைவன்முன்னின்று கூறும் வேட்கைக் கூற்றின்மை முற்கூறிய செய்யுட்களுட் காண்க. எனவே, தோழி; முன்னர்த் தலைவிக்கு வேட்கைக்கூற்று நிகழ்தல் பெற்றாம்,

உதாரணம் :

"சேணோன் மாட்டிய நறும் புகை' (குறுந் 150)

'ஈயற் புற்றத் தீர்ம் புறத் திறுத்த' (அகம். }

எனபனவும்,

இவள்ே நின்சொற்கொண்ட’’ (குறுந் .81)

என்றாற்போல் வருவனவும் முன்னர்க் காட்டினால்,

கடும் புனன் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் பேசல நடுங்களுர் தீர முயங்கி நெருநல் ஆகம் அடைதந் தோளே.........' (அகம். 62,9-13)

என்றாற்போல்வன தலைவி வேட்கையைத் தலைவன் குறிப்பான் உணர்ந்தன. (உ.எ)

1. கிழத்தி கிழவன் முற்கிளித்தல் இல்லை எனவே தோழிக்குத் த ைது வே ட்கையைக் கிளத்தல் - ண் டென்பது பெற்றாம்.