பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# தொல்காப்பியம் - பொருளதிகாரம்

கிளை முதலாப் பெருந்திணையிறுவாய் மேற் குறித்த அகத்திணை எழனுள்ளும் நடுவண் ஐந்திணை எனச் சிறப்பிக்கப்பெறும் அன்பின் ஐந்தினையொழுகலாற்றைக் களவு, கற்பு என இ ரு வ ைக க் கை கோளாகப் பகுத்து, அவ்விரண்டிலுள்ளும் களவாகிய ஒழுகலாற்றின் சிறப்பியல்பினை இவ்வியலில் விரித்துரைக்கின்றாராதலின் இஃது அகத்திணையியலோடு இயைபுடையதாயிற்று.

அன்பின் ஐந்திணையாகிய இக்களவொழுக்கத்தினைக் காமப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடுதழாஅல், தோழியிற் கூட்டம் என நால்வகையாகப் பகுத்துரைப்பர். அன்புடையார் இருவர் முற் பிறப்பிற் செய்த நல்வினையின் பயனாகத் தனிமையில் எதிர்ப்பட்டு ஒருவரையொருவர் இன்றியமையாதவராய் அன்பினால் உளம் ஒத்த லாகிய நெஞ்சக் கலப்பே காமப்புணர்ச்சியாகும். இருவரது உள்ளக் குறிப்பும் முயற்சியுமின்றி நல்வினைப் பயனாகத் தன்னியல்பில் நிகழும் இ வ் வு ற வினை இயற்கைப் புணர்ச்சி, தெய்வப் புணர்ச்சியென்ற பெயர்களால் வழங்குவர் தமிழ் முன்னோர்.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் அடுத்த நாளும் அவ்விடத்திற் சென்று தலைவியை எதிர்ப்படுதல் இடந்தலைப்பாடு எனப்படும். தலைமகளுடன் தனக்கு ஏற்பட்ட உறவினைத் தன் உயிர்த்தோழனாகிய பாங்கனுக்குச் சொல்லி நீ எனக்குத் துணை யாக வேண்டும்’ எனத் தலைவன் வேண்ட, அவன் குறித்தவழியே பாங்கன் சென்று தலைமகள் நின்ற நிலைமையுணர்ந்து வந்து தலைவனுக்கு உணர்த்தியபின் தலைவன் சென்று தலைமகளை யடைதல் பாங்கற் கூட்டம் எனப்படும். இக் களவொழுக்கம் நீண்ட நாட்கள் தொடர்ந்து நிகழவேண்டும் என விரும்பிய தலைவன், தலைவிக்குச் சிறந்தாளாகிய தோழியை இரந்து பின்னின்று அவள் வாயிலாகத் தலைவியைக் கண்டு அளவளாவுதல் தோழியிற் கூட்ட பாகும். இவை நான்கும் இம்முறையே நிகழ்தல் இயல்பு.

இனி, இவ்வொழுகலாறு இம்முறை நிகழாது இடையீடுபட்டு வருதலும் உண்டு. தலைவன் தலைமகளை எதிர்ப்பட்ட முதற்காட்சி யில் அன்புடையார் எல்லார்க்கும் மெய்யுறு புணர்ச்சி தடையின்றி நிகழும் என்பதற்கில்லை. தலைமகளை ஏதேனும் ஓரிடத்தில் எதிர்ப் பட்ட தலைமகன், அவள் காதற் குறிப்பு உணர்ந்த நிலையிலும் கூட்டத்திற்கு இடையீடு உண்டாய வழி அங்கே சென்ற வேட்கை தணியாது வந்து, தலைமகளை நேற்றுக் கண்டாற்போன்று இன்றுங்