பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்ப உஅ 空_浮 苏

ஆய்வுரை

இது, தலைவிக்கு உரியதோர் இலக்கணம் கூறுகின்றது.

(இ-ள்.) வேறுவேறாகக் காதல் செய்தொழுகும் அறிவில்லா தாரைப் போன்று பலர்க்கும் புலனாகத் தனது மிக்க வேட்கையைத் தலைவன் முன்னர்ச் சொல்லுஞ்சொல், நினைக்குங்காலத்துத் தலைவி யிடத்து நிகழ்தல் இல்லை. அவ்விடத்துத் தலைவியது வேட்கை, புதுக் கலத்துப் பெய்த நீர் புறம்பொசிந்து காட்டுமாறு போலும் உணர்வினையுடைத்தென்று கூறுவர் புலவர் எ-று.

பிற நீர் மாக்களின் அறியத் தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் கிழத்திக்கு இல்லை என இயையும். பிற நீர் மாக்கள் என்றது, ஒத்த கிழவனும் கிழத்திய மாய் எக்காலத்தும் ஒன்றுபட்டு வாழும் அன்பின்றித் தாம் கூடியிருக்கும் காலத்தும் தப் மை வேறுவேறாகக் கருதி வேட்கை வயப்பட்டு மனம் சென்ற வழியொழுகும் தன்மையினராய மடவோரை, மாக்களின் என்புழி இன் உவமவுருபு. அறிய. பலர்க்கும் புலனாக. பெய்ந்நீர் என்பதற்கேற்பப் புதுவதாக நீர் பெய்தற்குரிய புதுக்கலம் என்பது வருவித்துரைக்கப்பட்டது.

உக. காமக் கூட்டக் தனிமையிற் பொலிதலின்'

தாமே தூதுவ ராகலும் உரித்தே

இளம்பூரினம் என்றது, கள விற்புணர்ச்சிக் குரியதொரு வேறுபாடுணர்த்துதல் துதலிற்று.

(இ-ள் ) மேற் சொன்னவாற்றால் பாங்கனுந் தோழியு நிமித் த. மாகக் கூடுதலேயன்றித் தாமே தூதுவராகிய கூட்டங்கள் நிகழப். பெறும். அது சிறப்புடைத்தாதலால் என்றவாறு.

எனவே, பாங்கற் கூட்டம் தோழியிற் கூட்டம் என்பன நியம மில்லை; யார் மாட்டும் என்றவாறாம். தனிமையிற் பொலிதலின் என்றமையான் இது மிகவும் நன்று. (உக)

  • . தனிமைபிற் பொலி தலாவது, பிறர் றியா து ஒத்த அன் பின சாகிய

இருவரும் தனித்துள்ள தனிமை நிலையில் விகழ்தலால் பொலிவுடையது காமக்

கூட்டமாகிய கள வாதலின் , தலைவன் தலைவிய கிய இருவரும் பிறரை வாயிலா கக

கொள்ளாது தாமே ஒருவர் க்கொருவர் தமது வேட்கையைப் புலப்படுத்தற்கும்

سي ممr

உரியர் என்பதாம் ,