பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2_R ఫ్రో தொல்காப்பியம்-பொருளதிகாரம்

"சுட்டுக்கிளவி என்றதன் கருத்துத் தலைவன் இருவகைக் குறியும் வேண்டியவழி அவனை மறாது தான் அறிந்த விடத்தினைக் கூற்றானன்றிக் මේ றி ப் பா ன த ல சிறைப்புறத்தானாதல் தோழியானாதல் உணர்த்துமென்பதாம். தலைவன் களஞ்சுட்டு மாயின் யாண்டானும் எப்பொழுதானும் அத் களவொழுக்கம் நிகழ்ந்து பிறர்க்கும் புலனாய்க் குடிப்பிறப்பு முதலியவற்றிற்குத் தகாதாம். விரியினர் வேங்கை' என்னும் (38) அகப்பாட்டுத் தலைவி களஞ்சுட்டியது . "மறந்திசின் யானே என்றலின் இது குறிப்பான் உணர்த்திற்று. பிறவும் வந்துழிக் காண்க. (உக

  • *

ஆய்வுரை

இது, களவொழுக்கத்திற் குறியிட மிதுவெனக் குறிக்கும் பொறுப்பு தலைமகட்குரியது என்கின்றது.

(இ-ஸ்.) இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவனதுசொல் லின் வரம்பினைக் கடத்தல் தலைமகட்கு அறமன்றாகலானும் தான் செல்லுதற்குரிய வழி அவ்விடமாதலானும் தாங்கள் இருவரும் மீண்டும் கண்டு. அளவளாவுதற்குரிய இடத்தைக் குறிப்பிடும் பொறுப்பு தலைமகளைச் சார்ந்ததாகும எ-று.

அவன் என்றது, தலைவனை. வரம்பு என்றது அவன் பணித்த சொல்லாகிய எல்லை. இறத்தல் - கடத்தல், அறம். கற் றமாகிய நெறிமுறை. தனக்கு அறமன்மையின் என இன்னும், தான் செலற்குரிய வழி ஆகலான்’ என ஆனும் ஏதுப் பொருளில் வந்தன.

தலைவியின் உடன்பாடு பெற்றுத் தோழியாற் குறியிடம் சுட்டப்பட்டுத் தலைவன் தலைவியைக் கூடும் இடம் என்றது, பாங்கியின் உதவிபெற்றுத் தலைமகளைக் கண்டு அளவளாவும் பாங்கி யிற் கூட்டத்தின் பகற்குறி இரவுக் குறியாகிய இடங்களை.

கூக. தோழியின் முடியும் இடனுமார் உண்டே.

இளம்பூரணம்

இது, தோழியிற் கூட்டத்திற் காயதொரு சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்.) மேல், காமக்கூட்டந் தனிமையிற் பொலிதலிற்

றாமே தூதுவ ராகலும் உரித்' தெனக் கூறிப்போந்தார்; அவ்வாறன்றி மேற் சொல்லப்பட்ட இயற்கைப் புணர்ச்சியாவது