பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடூச தொல்காப்பியம்-பொருளதிகாரம்

ஆற்றது என்றார். இரவிலும் பகலிலும்’ எனவே களவொழுக் கத்திற் காதலர் இருவரும் தம்முட் கண்டு அளவளாவுதற்குரிய வகையிற் குறித்த இடம் இரவுக்குறி, பகற்குறி என இருவகைப்படும் என்பதாம். இத்தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றி யமைந்தது,

'குறியெனப் படுவ திரவினும் பகலினும்

அறியக் கிளந்த இடமென மொழிப” (கஅ) வினவரும் இறையனார் களவியலாகும். சக. இரவுக் குறியே இல்லகத்’ துள்ளும்

மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே மனையகம் புகாஅக் காலை யான. இன்ம்பூரணம்

என்றது, இரவுக்குறிக்கு இடமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரவுக்குறியாம் இடமே இல்லகத்துள் மனையகம் புகாவிடத்துக்கண் மனையோர் கிளவிகேட்கும் அணிமைத்தாம் என்றவாறு; -

எனவே, மனைக்கும் எயிற்கும் நடுவணதோரிடம் என்று கொள்ளப் படும். (சக) நிச்சினார்க்கிணியம்

இது, நிறுத்தமுறையான்ே இரவுக்குறியிடம் உணர்த்து கின்றது.

(இகள்.) அகமனைப் புகாக் காலை ஆன இரவுக்குறியேஉண்மனையிற் சென்று கூடுதற்கு உரித்தல்லாத முற்காலத்து உண்டான இரவுக்குறியே:

ஏகாரம், பிரிநிலை. இல்லகத்துள்ளும் மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே. இல்வரைப்பினுள்ள தாகியும் மனையோர் கூறிய கிளவி கேட்கும்: பிறம்னை'யிட்த்தித்ாம் (எ-று). - 1. డ్రై-వచq mణా * சூழவுள்ள ம்வினப்பரப்பு.

2. இல்லகத்துள் மனையோர் கிளவி கேட்கும் வழியது இரவுக்குதி எனவே, ஒருகால் மனையின் அகமாகிய உள்ளிடமும் இரவுக்குறியாதற்கு ஏற்றதுபோலும் என ஐயுறாமைப் பொருட்டு மனையின் உள்ளிடத்தை ம் துத்திற்கு 'டினை :கம் புகாக்காலையான என்றார் ஆசிரியர். எனவே தலைவியின் வளமனை எல்லைக்குள் அகமனைக்கும் புறமதிலுக்கும் இடையே மனைப்புறத்தே பமைவது இரவுக் குறி வாதல் கன்கு புலனாம்.

8. புறகனையிடத்ததாம் என்றிருத்தல் வேண்டும்.