பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** * - e sாவியல்-நூற்ப சச இ.அ.F.

முன்னர் நின்ற ஆங்கு முன்னிற்குத்திரத்து அல்ல.குறியைச் சுட்டிற்று பின்னர் நின்ற ஆங்கு உவமவரு பு. (, .) -త్తి, ఓ శాతా

இது, மேற்கூறிய இருவகைக் குறிகட்கும் எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுகின்றது .

(இ - ள். காதலர் இருவகள்ளத்தே உயர்ந்து வளர்தற்குரிய சிறப்பினதாகிய பேரன்பினைப் பேணி வளர்க்கும் காவல்மைந்தன் தனிமையிடமாகிய நிலைமைக்கண் அவ்வப்பொழுதும் இடமுமாகிய சூழ்நிலைக்கேற்ப மறைந்த ஒழுக்கமாகிய களவில் கூட டம் நிகழ்தலும் உண்டு எ - று.

இரவுக்குறி, பகற்குறி எனத் தம்மாற் குறித்துக் கொள்ளப்பட்ட குறியிடங்களேயன்றி, அவ்வாறு குறித்துக் கொள்ளப்படாது காதலர் இருவர் தனிமையிற் கண்டு அளவளாவுதற்கு ஏற்ற சூழ்நிலையும் பாதுகாப்பும் உடையதாய்த் தன்னியல்பில் நேர்படும் இடமும் பொழுதும் களவிற் கூட்டம் நிகழ்தற்குரிய பகற்குறி இரவுக்குறிகளுக்குரிய குறியிடங்களாக அமைதலும் உண்டு என்பது இந்நூற்பாவிற் கூறப்படும் சிறப்பு விதியாகும்.

"ஓங்கிய சிறப்பின் ஒரு சிறையான ஆங்காங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டு என இயைத்துப் பொருள் கொள்க. ஓங்கிய சிறப்பாவது, காதலர் இருவரது உள்ளமும் மேன்மேல் உயர்ச்சி பெறுதற்குரியதாய் அவ்விருவருள்ளத்தே கிளர்ந்து தோன்றும் பேரன்பாகும். ஒருசிறை - பிறர் அறியாவாறு பாதுகாவலமைந்த தனியிடம். ஒருசிறை நெஞ்சோடுசாவுங்காலை' (கற்பியல்-ச) என்புழி ஒருசிறை என்னுஞ் சொல் தனித்து' என்ற பொருளில் வழங்கப் பெறுதல் இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும்.

உரித்து, எனவே அவன் வயின் உரித்தாதலும் தானே பெறப்படும். ஆதலின் தலைவனும் அல்ல குறியால் வருந்துவன் என்பதற்குத் தனியொரு நூற்பா கூற

வேண்டியதில்லை.

இருவகைக் குறி பிழைப்பா கியவிடத்துத் தலைவனது கலக்கம் இவ்வியல் 18. ஆம் நூற்பாவில் கூறப்பட்டுள்ளமை இளம்பூச டைர் உரையால் புலனாகும்,