பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் நூற்பா சடு உச்டு

登_

(122) முற்கூறிற்று இதனான் அன்பு மிகுதி கூறினார். இதற்குப் பிராயச்சித்தம் அந்தணர் முதலிய மூவர்க்கும் உண்மை வந்த குற்றம் வழிகெட வொழுகலும் தொல். பொ, 146). எனக் கற்பியலிற் கூறுப. (ச)

ஆய்வுரை

இது, களவொழுக்கத்தின்கண் தலைமகனுக்காவதோர் கடமையுணர்த்துகின்றது.

(இ.ஸ்.) உலகத்தாாறியாது காதலர் இருவரும் மறைந்தொழுகும் ஒழுகலாறாகிய களவொழுக்கம் காரணாகத் தான் மேற்கொள்ளுதற்குரிய விளையாட்டும் விழாவும் ஆகிய சிறப்புடைய நிகழ்ச்சிகளை நீங்கியொழுகும் ஒழுகலாறு தலைவனுக்கு இல்லை எறு.

மறைந்க ஒழுக்கம் என்றது களவொழுக்கத்தினை ஒரை என்னுஞ் சொல். விளையாட்டு என்னும் பொருளில் வழங்கும் தனித். தமிழ்ச் சொல்லாகும். "கோதை யாயமொடு ஒரைதழிஇ’ (அகம் 49) எனவும். ஒரையாயம் (அகம்.219. (குறுந்.48) எனவும், விளை. யாடாயத்து ஒரையாடாது' (நற்றிணை 2) எனவும் ஒரையென்னுஞ் சொல் விளையாட்டு என்னும் பொருளில் சங்கச் செய்யுட்களிற் பயின்றுள்ளமை காணலாம். இந்நூற்பாவில் இடம்பெற்றுள்ள ஒரை. யென்னுஞ் சொல்லும் விளையாட்டு என்னும் பொருளிலேயே ஆளப். பெற்றுள்ளமை கூர்ந்துணர்தற்குரியதாகும். நாள்-திருவிழா. மா. யோன்மேயஓணநன்னாள் (மதுரைக் காஞ்சி-591) எனவும், ஆதிரை நாள் காணாதே போதியோபூம்பாவாய்’’ (தேவாரம் 3-47-4) எனவும், நாள் என்பது திருவிழா என்னும் பொருளிற் பயில வழங்குதல் இங்கு ஒப்புநோக்கற்பாலதாகும்.

தலைவன் தான் விரும்பி மேற்கொண்டொழுகும் களவொழுக், கம் காரணமாகத் தான் தன் தோழர்களுடன் தவறாது கலந்து கொள்ளுதற்குரிய சிறப்புடைய விளையாட்டினையும் ஊர்மக்கள் பலரும் காணத் தான் மேற்கொண்டு நிகழ்த்துதற்குரிய திருவிழாக் செயல்முறைகளையும் கைவிட்டு விலகியொழுகுவானாயின், அந்நிகழ்ச்சிகளில் அவன் கலந்து கொள்ளாமை பற்றி அவனைக் குறித்துப் பலரும் வினவா நிற்க, அது காரணமாக அவனது கள, வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாமாதலின் களவொழுக்கம் ஒழுகுந்