பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா சங் 塾一岛G了

உடைய அரியவழியினது ஆதல். அழிவு - மனன் அழிவு; சோம்பல். அச்சம் - ஆடவனுக்கு ஏலாத அச்சவுணர்வு, ஊறு - கொடிய விலங்கு முகலியவற்ற ல் வழியிடையே யுளவாம் இடையூறுகள். உளப்பட இவை காரணமாக ஆற்றினது அருமையும் அழிவும் அச்சமும் ஊறும் காரணமாக மறைந்த ஒழுக்கத்தினைத் துறந்து தலைமகளைக் கள விற் காணாது தவிர்தல் தலைவனுக்கு இல்லை என்பார், அதனோரற்றே" என்றார். களவொழுக்கம் ஒழுகும் தலைவன் ஆற்றினது அருமை முதலிய தடைகளை எண்ணித் தன் ஆருயிர்க் காதலியாகிய தலைவியைக் கண்டு அளவளாவும் காதற் கேண்மையினைத் தவிர்வான் அல்லன் என அவனது காதற் கடமையினை வற்புறுத்தும் முறையில் அமைந்தது இந். நூற்: ாவாகும்.

சஎ. தங்தையுக் தன்னையும் முன்னத்தின் உணர்ப. இளப் பூரணம்

என்றது. தந்தையும், தன்னையரும் களவு உணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தந்தையரும் தன்னையரும் குறிப்பின் உணர்ப என்றவாறு. -

எனவே, கூற்றினான் உரைக்கப்பெறார் என்றவாறாம். (சஎ) தக்சினார்க்கினியம் -

இது தந்தையுந் தன்னையுங் களவொழுக்கம் உணருமாறு கூறுகின்றது.

| இ - ள்.) தந்தையுந் தன்னையும் ஒருவர் கூறக்கொள்ளாது உய்த்துக் கொண்டுணர்வர்” (எ . று) .

நற்றாய் அறத்தொடு நின்ற வழியும்,

இருவர் கண் குற்றமு மில்லையா லென்று தெரு மந்து சாய்த்தார் தலை' (கலி.39) என்றலின், முன்னர் நிகழ்ந்த வெகுட்சி நீங்கி உய்த்துக் கொண்டு உணர்ந்தாராயிற்று. (சசி)

1. தன் ஐ-தமையன் முன்னம்.குறிப்பு. எனவே இவர்கட்குக் குறிப்பினர்னன்

நிக் கூற்றினால் உரைத்தல் கூட தென்பதாம்.

2. உய்த்துக் கொண்டுணர்தலாவது, குறிப்பினால் .. னர்ந்துரைத்தல்.