பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா சள 芭一等岛

தக்சினார்க்கினியம்

இது தந்தை தன்னைக்கு நற்றாய் களவொழுக்கம் உணர்த்து மாறு கூறுகின்றது.

(இ-ள்,) தாய் அறிவுறுதல் - நற்றாய் களவொழுக்கம் உண்ட டென்று அறிந்த அறிவு தந்தைக்குந் தன்னைக்குஞ் சென்று உறுந்தன்மை; செவிலியோடு ஒக்கும்-செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்று உணர்த்திய தன்மையோடு ஒக்கும் (எ .நூ) ,

என்றது, செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றாற்போல, நற்றாயுந் தந்தைக்குந் தன்னைக்கும் அறத்தொடு நிற்கும் என்றவாறாயிற்று. அது,

'எனவாங், கறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்” (கலி.39) என்பதனான் உணர்க.

இனி இதற்கு நற்றாயுஞ் செவிலி உணர்ந்தாற்போல உணரு மென்று பொருள் கூறில் தாய்க்கும் வரையார்’ (தொல், பொ.116) என்னுஞ் சூத்திரம் வேண்டாவாம். {P67) ஆய்வுரை

இது நற்றாய் உணருமாறு உணர்த்துகின்றது.

(இ-ன்.) நற்றாய் தலைமகளது களவொழுக்கத்தினை அறிதல் செவிலியுணரும் முறைமையினோடு ஒக்கும் எ-று.

"அவருள், தாயறிவுறுதலின் ஏனோரும் அறிய’ (உங்) எனவரும் இறையனார் களவியல் தாய்வழியாகவே தந்தை தன்னை யர் உணர்வர் என்பதனை வற்புறுத்துவதாகும்.

சக. அம்பலும் அலருங் களவுவெளிப் படுத்தலின்

அங்கதன் முதல்வன் கிழவ னாகும். இளம்பூரணம் என்றது களவு வெளிப்படுப்பார் அவர் என்பது உணர்த்துதல் துதலிற்று.

1. தாயறிதல் என்னாது 'தாய் அறிவுறுதல்’ என்றமையால் 'தாய் கள வொழுக்கம் உண்டென்று அறிந்த அறிவு தந்தைக்கும் தன்னைக்கும் சென்று உறும் தன்மை என கச்சினார்க்கினி பர் கூறிய இவ் அரை ஆசிரியர் கருத்திற்கு இத்ததேயாம்.