பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-எர் தொல்காப்பியம்-பொருளதிகாரம்

(இவள்.) அம்பல் என்பது முகிழ்த்தல். அஃது ஒருவரொருவர் முகக்குறிப்பினாற் றோற்றுவித்தல். அலராவது சொல்லுதல்.’ அதனானே இவை இரண்டும் களவினை வெளிப்படுத்தலின் அதற்குக் காரணமாவான் தலைவன் என்றவாறு. என்னை, அவனை யறிந் துழியல்லது இவை நிகழாமையின், தலைவி வேறுபாட்டான் ஆகாதே எனின், ஆண்டு எற்றினான் ஆயிற்று என ஐய நிகழ்தலல்லது துணிவு பிறவாதாம் என்று கொள்க. (சசு) நச்சினர் ரிக்கினியம்

இது களவு வெளிப்படுத்தற்கு நிமித்தமாவான் தலைமகனென்கின்றது.

(இவள்.) அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின் முகிழ்த்தலும் பலரறியச் சொல் நிகழ்த்தலுங் களவொழுக்கத்தினை வெளிப்படுத்தலான்; அங்கதன் முதல்வன்' கிழவன் ஆகும் . அவ்வி. டத் து அவ்வெளிப்படை நிகழ்த்துதற்கு நிமித்தமாயினான் தலைமகனாம் (எறு}.

தலைவனை அறிந்தபின் அல்லது முற்கூறிய ஐயம் நிக ழாமையின் தலைவிருைத்தம் நிமித்தமாகா. ஆண்டு ஐயம் நிகழ்த லன்றித் துணிவு தோன்றாமையின். வரைவு நீட்டிப்போனுந் , தலைவி தமர்க்குக் கூறி வெளிப்படுப்போனுந் தலைவனே என்று ணர்க, அது,

நீரொலித் தன்ன போர் அலர் நமக் கொழிய அழப்பிரிந் தோரே'

{邻5江。2蚤1}

எனவும்:

'நெறியறி செறிகுறி புரிதிரி பறியா

வதிவனை முந்து ரீஇ' (கலி.39)

என்றாற்போல வருவனவும் பிறவும் வெளிப்படையசமாற்றாற் கண்டுனர்க, )پي تي {

1. அம்பல் - அரும்புதல். அலர் விரிதல்.

2. முதல்வன் . காரணமாவான்; முதல் காரணம், "ஆயெட்டென்ப தொழில் முதல்நிலையே (சொல்-வேற்றுமையியல் . 21, என் புழி முதல் என்பது காரணம் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளமை இங்கு ஒப்புக நோக்கற்பாலதரம்,