பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Είύ தொல்காப்பியம் - பொருள்திகாரம்

சூழும் வண்டு. அது பயின்றதன் மேலல்லது செல்லாமையின் அதுவும் மக்களுள்ளா ளென்றறிதற்குக் க ரு வி யா யி ற் று. இழையென்பது அணிகலன். அது செய்யப்பட்டதெனத் தோற்றுதலானும், தெய்வப்பூண் செய்யா அணியாதலானும் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. வள்ளி என்பது முலையினும் தோளினும் எழுதிய கொடி. அதுவும் உலகின் உள்ளதாகித் தோன்றுதலின் (அதுவும்) கருவியாயிற்று. அலமரல் என்பது தடுமாறுதல். தெய் வமாயின் நின்றவழி நிற்கும். அவ்வாறன்றி, நின்றுழி நிற்கின்றிலள் என்று சுழற்சியும் அறிதற்குக் கருவியாயிற்று. இமைப்பென்பது கண்ணிமைத்தல். தெய்வத்திற்குக் கண் இமையாமையின் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அச்சமென்பது ஆண்மக்களைக் கண்டு அஞ்சுதல். அது தெய்வத்திற்கு இன்மையான் அதுவும் அறிதற் குக் கருவியாயிற்று. அன்னவை பிறவும் என்றதனான் கால் நிலந்தோய்தல், வியர்த்தல், நிழலாடுதல் கொள்க. இவை கருவியாக்த் துணியப்படும் என்றவாறு.

காட்சி முதலாகிய இத்துணையும் கைக்கிளைக் குறிப்பாம்." செய்யுள் வந்தவழிக்காண்க. இனிக் குறிப்பறிதல் கூறுகின்றராகலின் அக்குறிப்பு நிகழும்வழி இவையெல்லாம் அகமாம். என்னை? இருவ, மாட்டு மொத்த நிகழ்ச்சி யாதலான். இவை தலைமகள் மாட்டுப் புலப் படநிகழாது. ஆண்டுக் குறிப்பினாற் சிறிது நிகழுமென்று கொள்க.

அவை வருமாறு:- .

'உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று” (குறள். 1090) எனவரும். பிறவும் அன்ன. (ge) நச்சினார்க்கினியம்

இஃது ஐயுற்றுத் தெளியுங்கால் இடையது ஆராய்ச்சியாதலின் ஆராயும் கருவி கூறுகின்றது. வண்டு முதலியன வானகத்தனவன்றி மண்ணகத்தனவாதல் நூற்கேள்வியானும் உய்த்துணர்ச்சியானும் தலைமக்கள் உணர்ப.

بسمتہ مم-پیسہ

1. அது.அவ்வண்டு: பயின்றதன் மேலல்லது செல்லாமையின் - தான் பல காலும்.தேனுண்டு பழகிய பூக்களின் மேலன்றி ஏனைப் பூக்களில் மொய்க்காமையின். 2. இயற்கைப்புணர்ச்சியில் முதற்கண் தலைமகன்பால் நிகழும் காட்சி, ஐயம், துணிவு, இம் மூன்றும் தலைமகளது உள்ளக் குறிப்பினை யறிதற்கு முன்னே தலைமகன்பால் தோற்றும் ஒருமருங்குபற்றிய உறவாதலின் கைக்கிளைக் குறிப் பாயிற்று,

- 8. இவ்வாறே தலைமகள்பால் காதற் குறிப்பு கிகழும்வழி இவை அன்பின்ஐக்திணை யெனப்படும். அகவொழுக்கமாக அமையும் என்பது கருத்து,