பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா டு リ 学aー

அறிவுடம்படுத்தற்கு என்பது-ஒருவர் வேட்கைபோல இரு வர்க்கும் வேட்கை உளதாகுங் கொல்லோ எனக் கவர்த்து நின்ற! இருவரது அறிவினையும் ஒருப்படுத்தற்கு என்றவாறு.

கூட்டியுரைக்குங் குறிப்புரையாகும்’ என்பது-தமதுவேட்கை யொடு கூட்டி ஒருவர் ஒருவருக்கு உரைக்குங் காமக்குறிப்புரையாம் என்றவாறு.

இதன் பொழிப்பு:-இருவர்க்குங் கவர்த்து நின்ற அறிவை ஒருப்படுத்தற் பொருட்டு வேட்கையொடுகூட்டிக் கூறுங் காமக் குறிப்புச் சொல் இருவரது நாட்டமாகும் என்றவாறு. .

ஆகும் என்பதனை நாட்டம் என்பதனொடு கூட்டியுரைக்க.

இதற்குச் செய்யுள்:

'பானலந் தண்கழிப் படறிந்து தன்னை மார்

நூல்நல நுண்வலையாற் கொண்டெடுத்த-கானற் படுபுலால் 'காப்பாள் படைநெடுங்கண் நோக்கம் கடிபொல்லா என்னையே காப்பு.'(திணை மாலை நூற்.உ)

கண்ணினான் ய என்றவாறு. (டு)

அ றவாறு

1. கவர்த்து கின்ற அறிவாவது, 'நாம் அவரை விரும்புமாறுபோல அவரும் நம்மை விரும்புவாரோ விரும்பமாட்டாரோ?' எனக் காதலர் இருவருள்ளத்தும் ஐய நிலையில் இருதலைப்பட்டு நிகழும் அறிவு. இங்ங்னம் நிகழும் இருவரது அறிவினையும் ஒருப்படுத்தலாவது, 'நாம் அவரைக் காதலிப்பது போன்றே அவரும் கம்மைக் காதலிக்கின்றார்’ என்னும் காதற் குறிப்பினை இருவரது அறிவும் தெளிந்து உடன் படுமாறு செய்தல்.

2. கூட்டியுரைத்தலாவது, உள்ளக் குறிப்பினை அதற்குக் காரணமாய் நிகழும் வேட்கையுடன் சேர்த்துணர்த்தல், இத்தகைய காமக் குறிப்புரையினைப் புலப்படுத்தற்குரிய கருவியாக அமைந்தன தலைவன் தலைவியாகிய இருவருடைய கண்களும் என்பது இந்நூற்பாவினால் அறிவுறுத்தப்பெறும் நுண்பொருளாகும். இக்நுட்பத்தினை எளிய சொற்களால் தெளிவாகப் புலப்படுத்தும் முறையில் இளம்பூரணருரை அமைந்திருத்தல் உணர்ந்து மகிழத்தகுவதாகும்.