பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா எ

  • சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ

நன்றின்யால் உய்ப்ப தறிவு’’ (குறள், 422)

என வரும்.

பெருமை நிமித்தமாக உரன் பிறக்கும்; அவ் வுரனான் மெய்யுறுபுணர்ச்சி இலனாதலும் உரியனென இதுவும் ஒரு விதி கூறிற்று. தலைவிக்கு மெய்யுறுபுணர்ச்சி நடக்கும் வேட்கை நிகழாமைக்குக் காரணம் மேற் கூறுப. இனி இயற்கைப்புணர்ச்சி இடையீடு பட்டுழி இடந்தலைப்பாட்டின்கண் வேட்கை தணியாது நின்று கூடுபவென்றும், ஆண்டு இடையீடுபட்டுழிப் பாங்கனாற் கூடும். வென்றும், உரைப்போரும் உளர்'; அவர் அறியாராயினார்; என்னை? அவ்விரண்டிடத்தும் இயற்கைப் புணர்ச்சிக்கு உரிய மெய்ப்பாடுகள் நிகழ்ந்தே கூடவேண்டுதலின் அவற்றையும் இயற்கைப் புணர்ச்சியெனப் பெயர் கூறலன்றிக் காமப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலும் என ஆசிரியர் வேறு வேறு பெயர் கூறாரென்றுணர்க.

ஆய்வுரை

இது, தலைமகற்குரியதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்.). தன்னைத்தான் கட்டுப்படுத்தியொழுகும் பெருமையும்

சென்ற விடங்களில் மனத்தைச் செல்லவிடாது தீமையினின்றும் நீக்கி

நன்றின்பாற் செலுத்தும் அறிவுத் திண்மையும் தலைமகனிடத்தன

στ-Φί.

"அச்சமும் காணும் மடனும் முந்துறுதல் . اولیه

நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.

1. தலைவிக்கு மெய்யுறு புணர்ச்சி கடக்கும் வேட்கை நிகழாமைக்குக்

காரணம் இவ்வியலில் அடுத்து வரும் நூற்பாவிற் கூறப்படும்.

2. இங்கனம் கூறுவோர். இளம்பூரணர். இயற்கைப் புணர்ச்சி முதலாக ச் சொல்லப்பட்ட கான்கும் உள்ளப்புணர்ச்சிக்கும் அதன் வழி நிகழும் மெய்யுறு புணர் ச்சிக்கும் பொதுவாகிய இடங்களாதலின், இயற்கைப் புணர்ச்சியிலேயே மெய்யுறு புணர்ச்சி கிகழ்தல் வேண்டுமென் னும் யாப்புறவில்லையென் க.

8. முக் துறுதல் . முற்பட்டுத் தோன்றுதல்; உள்ளத்துத் தோன்றிய வேட். கையை மேலெழவொட்டாது பிற்படுத்தித் தானே முற்பட்டு கிற்றல்.

'முந்துறுத்த' என்பது கச்சினார்க்கினியர் கொண்ட பாடம்.

4. நிச்சமும் . காள்தோறும். கித்தம் நிச்சம் எனத் தகரத்திற்குச் சகரம் போலியாய் வந்தது. கித்தம்-காள்.