பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ဌိ = தொல்காப்பியம் - பொருளதிகாரம்

கல் மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்டல்

இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல் நீடுகினைக் திரங்கல் கூடு த லுறுதல் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும் - பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும் நிற்பவை கினை இ நிகழ்பவை உரைப்பினும் குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் - பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும் ஊரும் பேருங் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் - தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும் தண்டா திரப்பினும் மற்றைய வழியும். சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும் அறிந்தோள் அயர்ப்பி னவ்வழி மருங்கில் கேடும் பீடுங் கூறலும் தோழி நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி மடல்மா றும் இடனுமா ருண்டே.

இளம்பூரணம்

என்-எனின், களவிற் கூட்டம் நான்கினிடத்தும் தலைவன் கூற்று நிகழுமாறும் காதல்மிக்கு ஆற்றாமை கையிருப்பின் தலைவனாம் இயலும் கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.) மெய்தொட்டுப் பயிற லாவது - பெருமையும் உரனுமுடைய தலைமகன் தெளிவகப்படுத்தியது காரணமாகக் காதல் வெள்ளம் புரண்டோடத் தலைவியின் மெய்யைத் தீண்டிப் பயிறல்.