பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

象、「学。 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

' பாலொத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய்

தாலொத்த வைவனங் காப்பாள்கண்-வேலொத்தென் நெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பா ளெவன்கொலோ வஞ்சாயற் கேநோவல் யான்.” (திணை. நூற்.19)

இவை பகற்குறி இரந்தன.

“எல்லும் எல்லின் றசைவுபெரி துடையன்

மெல்லிலைப் பரப்பின் விருந்துன வொருவன்’’

- (அகம். 110 : 11-12)

எனத் தலைவன் இரவுக்குறி வேண்டியதன்ைத் தோழி கூறிய வாறு காண்க. இன்னும் இரட்டுற மொழிதல்' என்பதனால், 'தண்டாது’ என்பதற்குத் தவிராது இரப்பினு மெனப் பொருள்கூறிக், கையுறை கொண்டுவந்து கூறுவனவும், நீரேவுவன யான் செய்வேனெனக் கூறுவனவுந், தோழி நின்னாற் கருதப்படுவாளை அறியேனென்றுழி அவன் அறியக் கூறுவ்ன்வும், பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக." - உ-ம்: கவளக் களியியன்மால் யானைசிற் றாளி

தவழத்தா னில்லா ததுபோல்-பவளக் கடிகை யிடைமுத்தம் காண்டொறு நில்லா தொடிகை யிடைமுத்தம் தொக்கு.’ (திணை. நூற். 42)

நின் வாயிதழையும் எயிற்றையும் காணுந்தோறும் நில்லா என் கையிடத்தில் இருக்கின்ற பவளக்கொடியும் முத்தும் என்க."

மற்றைய வழியும் . குறியெதிர்ப்பட்டுங் கையுறை மறுக்கப் பட்டுங் கொடுக்கப்பெற்றும் இரந்து பின்னின்றான் அங்ங்னங் குறி. யெதிர்ப்பாடின்றி ஆற்றானாய் இரந்து பின்னிற்றலை மாறுமவ். விடத்தும் :

சொல்லவற் சார்தலிற் புல்லிய வகையினும் - தான் வருந்திக் கூறுகின்ற கூற்றினைத் தலைவியைச் சார்த்தித் தலைவன் கூறலின் இவ்வாறு ஆற்றானாய் இங்ங்னங் கூறினானென்று அஞ்சித் தோழி உணராமல் தலைவி தானே கூடிய பகுதியினும் :

1. பாடற் பொருளைத் துறையொடு தொடர்பு படுத்தியுணர் தற்கு இக். குறிப்பு வரையப் பெற்றுளது.

2. மேற்கோட் செய்யுளின் பொருளைச் சொல் முடிவு கட்டி விளக்கும் முறையில் இக்குறிப்பு வரை யப்பெற்றுளது.