பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் ’’نئے 67

இவை சாக்காடு குறித்தன.

  • மாவென மடலும் ஊர்ப பூவெனக்

குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே. (குறுந் 17)

இதனுட் பிறிதுமாகுப' என்றது வரைபாய்தலை,

'இட னென்றதனால் தோழி பெரியோர்க்குத் தகாதென்ற

வழித் தலைவன் மறுத்துக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவும் கொள்க.

"நானொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறு மடல்’ (குறள். 1133) எனவரும். X

இனி இடனும்’ என்ற உம்மையைப் பிரித்து நிறீஇ இரு நான்கு கிளவியும் மகிழ்ச்சியுங் கலங்கலுங் கூறும் இடனும் உண்டு, உரைப்பினும் பெட்பினு முவப்பினு மிரப்பினும் வகையினும் கூறும் இடனும் உண்டு, பகுதிக்கண்ணும் மற்றைய வழிக்கண்ணுங் கூறும் இடனும் உண்டு, மெய்யுறக் கூறலும் பீடுங்கூறலும் உண்டென முடிக்க. (11)

ஆய்வுரை

இஃது, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்னும் களவிற் கூட்டத்தின்கண் தலைவன் கூற்று நிகழ்த்துமாறும் காதல் மிக்கு ஆற்றாமை எல்லை கடந்த நிலையில் தலைவனுக்குளதாம் நிலையும் கூறுகின்றது.

(இ.ஸ்.) பெருமையும் உரனும் உடைய தலைவன் காதல் மீதுர்ந்த நிலையில் தனக்குச் சிறந்தாள் எனத் தெளிந்த தலை. மகளது மெய்யினைத் தீண்டிப் பழகுதலும், விளையாட்டின்கண் அவள் நலத்தைப் பாராட்டியுரைத்தலும், அவள் நின்ற இடத்தை நெருங்கிநின்று அன்பொடு தழிஇய சொற்களைக் கூறுதலும், (தலைவனது ஊற்றுணர்வு என்றும் பயிலாததன் மெல்லியல் மெய்விற்படுதலால் நாணமுடையளாகிய தலைமகள், அவ்விடத்திலுள்ள