பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கடி அக

حم

தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது உரைமதி யுடையுமென் உள்ளஞ் சாரல் கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சேயரி பரந்த ஆயிழை மழைக்கண் உறாஅ நோக்க முற்றவென் பைதல் நெஞ்சம் உய்யு மாறே” (நற்றிணை, 75)

அவட்பெற்று மலியினும்-தோழி உடம்பாட்டினைப் பெற்று மகிழல். இரட்டுற மொழிதலான் தலைமகளை இருவகைக் குறி. யினும் பெற்று மகிழினும் என்றும் கொள்க.

உ-ம்:- "எமக்குநயந் தருளினை யாயிற் பனைத்தோள்

நன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி அன்னநின் பண்புபல கொண்டே.”

(ஐங்குறு. 175)

இது அவட்பெற்று மலியுந் தலைவன் கூற்று.

இனி, உள்ளப்புணர்ச்சியா னின்றி யியற்கை யிடையிடுபட்டுழி, பின் தலைமகள் குறியிடங் கூறியவழி யதனைப் பாங்கற் குரைத்தற்குச் செய்யுள்:

'அணங்குடைப் பணித்துறைத் தொண்டி அன்ன

மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கிழைப் பொங்கரி பரந்த உண்கண் அங்கவிழ் மேனி அசையியல் எமக்கே’’

(ஐங்குறு. 174)

எனவுஞ் சிறுபான்மை வரும்.

'காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்

மாணிழை கண்ஒவ்வேம் என்று.” (குறள். 1114)

இது தலைவியைப் பகற்குறிக்கண் பெற்று மலிதல்.