பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கற்கூட்ட மரபுகள் 8ፇ யெல்லாம் படித்துணர்ந்தால் இவை நன்கும் விளக்க எய்தும், காற்கவிராச நமபி முதலியோர் மெய் தொட்டுப் பயிறல் முதலிய வற்றை இயற்கைப்புணர்ச்சியின வகைகளாகக் கொண்டு வழங்குவர். இடக்தலைப்பாடு இருவகை தலைவன் தானே சென்று கூடுவது, பாங்கனாற்கூடுவது என்று இடங்தலைப்பாடு இருவகைப் படும் என்று கூறுவர் நச்சினார்க்கினியர். பேராசிரியரும், துணை யின்றி நிகழும் களவு சிறப்புடைத்தாகலானும், பாங்கன். கழறும் (இடித்துரைப்பன்) ன்று அஞ்சி அவனை முக் துறத் தலைவன் மறைக்தொழுகு மாதலின் தன்னாற்கூடும் இடங் தலைப்பாடு நிகழ்ந்த பின்பே பாங்கனைத் துணையாக வேண்டுவன்’ என்று கூறினர். இவ்விடத்தில் ஒன்றனை நாம் எண்ணியுணர்தல் வேண்டும். இடங்தலைப்படுவார் பெரும்பாலும் பாங்கனை இல்லாதாரும், பாங்கனை உடையரானாலும் காணத் தைக் கடவாமல் அதன்கண் நிற்கும் கிறையுடையாரும், அல்லது அப்பாங்கனிடத்துக் கூறினால் அவன் மறுத்துக் கூறுவானே என் றெண்ணும் அச்சமுடையாரும், பாங்கனுமிருந்து காணமுமில்லா சானவிடத்தும் வினை வழியே கிற்றல் வேண்டுமென்று கினைக்கும் நீரருமாகவே இருப்பர். இவரல்லாத ஏனையோர் பாங்கற்கூட்டம் பெறுவர். இறையனார் களவியலாரும் இவ்விடக் தலைப்பாடு இரு வகைப்படும் என்றே கூறுவர். ஆங்ங்ணம் புணர்ந்த கிழவோன் தன்வயின் பாங்க னோரிற் குறிதலைப் பெய்தலும் பாங்கிலன் தமியோன் இடங்தலைப் படலுமென்று ஆங்க இரண்டே தலைப்பெயல் மரபே.8 (ஆங்கனம் புணர்ந்த கிழவோன்-இயற்கைப்புணர்ச்சி யின் பின் பிரிந்த தலைமகன்; பாங்கனோரிற் குறிதலைப் பேய்தல்-பாங்கனால் குறியிடத்துத் தலைப்பெய்தல்; பாங்கிலன் தமியோள் - பாங்கனையின்றித் தனியவளாக இடங் தலைப்படல் . இடத்து எதிரப்படுதல்) 3. களவியல் 1-நூற் 11 (நச்சினார்க்கினியர் உரை) 7. செய்யுளியல்-நூற்பா 186,(பேராசிரியர் உரை) 8. இறை, களவியல்-நூற். 3.