பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தோழி விற்கூட்டத்தில் சில மரபுகள் -(1) செப்புள் வழிக்காகப் பண்டையோர் குறிப்பிட்ட களவொழுக்கத்தில் பெருவாவிற்றாயுள்ளது தோழியிற்கூட்ட மாகும், இயற்கைப்புணர்ச்சி, இடக்திலைப்பாடு, பாங்கற்கூட்டம் என்ற மூன்றற்குப் பின்னர்ப் புலனெறி வழக்காகப் புலவர்களால் கூறப்பெறுவது இது. புலனெறி வழக்கம் என்பது, சுவைபட வருவனவெல்லாம் ஒரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறும் நாடக வழக்கும், உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்துவரும் உலகியல் வழக்கும் விரவி வருவதாகப் பாடப்பெறும் அகப்பொருள். அகப்பொருள் காடகத்தைப் பொறுப்புடன் கடத்தும் பெருவிசை போன்ற இவள் செவிலியின் மகளாகக் கூறப்பெறுகின்றாள் ; உலகியல் நன்கு அறிந்தவளாகவும் காட்டப்பெறுகின்றாள். இவளைப் பற்றுக்கோடாகக் கொண்டுதான் தலைவன் தலைவியை கிரந்தரமாகச் சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவான். இறையனார் களவியலுரையாசிரியர் தலைவன் இவளுடன் தொடர்பு கொள்வதை இங்கினம் காட்டுவர் : இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த பின்னர்த் தன்னை அவள் காணாமல் தான் அவளைக் காண்டதோர் அணிமைக்கண் கின்றானாக மற்றையாரெல்லாம் தலைமகட்குச் செய்யும் வழிபாடும் இவள் விசேடத்தாற்செய்யும் வழிபாடும், எல்லார்க்கும் தலைமகள் அருளிச்செய்யும் அருளிச் செய்கையும், இவட்கு விசேடத்தாற் செய்யும் அருளிச்செய்கையும் கண்டமையான். இவளாம் இவட்குச் சிறந்தாள் இதுவும் எனக் கோர் சார்பு” என்பதனை உணர்ந்தான். உணர்க் தமையான், அவளுழிையே செல்லும் என்பது. அஃதேயெனின், அவளுழைச் செல்கின்ற ஆயங்கள் ஐயுறாவோ எனின், எங்ங்ணம் ஐயுறும்: தழையும் கண்ணியும் கோடற்பொருட்டாக வேறோரிடத்துத் தனியளாய் கின்ற கிலைமைக்கண் செல்லும் என்பது. அவன் இன்னணம் தனியளாய் கிற்பது அறிந்து செல்லுமேர் எனின், செல் லான் ; விதியே கொண்டு சென்று தலைப்படுவிக்கும் என்பது.: T இறையனார் . களவியல் - நூற்-5 இன் (உரை)