பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii அவர்களது அறிவும் கல்வியும் இவற்றின் பொருட்டே பயன்பட்டன. சமய நூல்களும் சமயக் குருமார்களும் கூறியவையே உண்மை. என்றும், இவ்வுண்மைக்கு மாறாக, புறம்பாக, ஒர் உண்மையும் இருக்க முடியாதென்றும் கருதினர். அறிவினைப் பயன்படுத்திப் புதிய உண்மைகளைக் கண்டறிய முயலவும் இல்லை; புதிய உண்மைகளைக் கண்டறிவதும், அவற்றை மக்கட்கு வெளியிடுவதும் பாவச் செயல் என்றே கருதினர்; அங்கனம் நம்பவும் செய்தனர். அக்காலத்தில் கற்றவர்கள் கூர்த்த மதியினராக இருக்தும், அம் மதியினைத் தக்கவாறு பயன்படுத்தாமல், சிறு மகார் பொம்மை. களை வைத்து விளையாடுவதுபோல் விளையாடினர். இவ். வுலகினை இயக்கிவரும் இயற்பியல் விதிகளைப்பற்றி இவர்கள் ஒரு சிறிதும் அறியார். ஆயினும், தெய்வத்தின் இயல்பு என்ன தேவ துரிதர்கள் எவ்வளவு விரைவாகச் செல்வர், எவற்றின் மீது இவர்ந்து செல்வர் என்பன போன்ற கற்பனைக் கருத்துகளில் ஆதி நுட்பமாக வாதப்போர் புரிந்து வந்தனர். புதிய அறிவுத் துறைகளில் நுழைக்து உண்மைகனை ஆராயவேண்டும் என்ற அவா இருந்தும், சமயக் கோட்டாடுகளின் கட்டுப்பாட்டினால்-அவற்றின் பிணிப்பினின்று. வெளியேற முடியாமல் திண்டாடினர். கருத்துப்பொருள் வாதத் திலே அழுந்திக் கிடந்த இவர்களால் காட்சிப் பொருள் ஆராய்ச்சிக்குள் நுழைய முடியவில்லை. இக்கிலையில் ஞானக்கதிரவன் மெதுவாகத் தோன்றத் தொடங்கினான். கி.பி. 1453-ஆம் யாண்டில் உரோமானியத். தலைநகராக வேண்டிய காண்ஸ்டாண்டி கோபில் துருக்கியரால் கைப்பற்றப்பெற்றது. இந்த பாண்டிலிருந்து மறுமலர்ச்சியின் தாக்குதல்கள் ஐரோப்பியரின் அறிவுலகத்தை மோதின. சில: அறிவியல் நூல்களும் புதிய அறிவுச் செல்வங்களும் அறபு. காட்டவர் மூலம் சிறிது சிறிதாக இவர்கட்குக் கிடைத்தன. இவற்றால் இயற்கை புலகைக் காண வேண்டும் என்ற அவா இவர்களிடம் எழுந்தது; அதற்கேற்றவாறு ஆராய்ச்சிக்கண்ணும் திறக்கப்பெற்றது. இப்பொழுது கிரேக்க இலக்கியங்கள் வெளி வரத் தொடங்கின. அச்சுப்பொறியின் கண்டுபிடிப்பால் இந்த இலக்கியங்களும் மற்றைய நூல்களும் மக்களிடையே பல்கிப். பெருகின. சமயத் தளையில் அகப்படாத புதிய அறிவும் புதிய கோக்கங்களும் முகிழ்த்தன. கிரேக்கக் கவிஞர்களின் கற்பனையில் அமைந்த புதிய உலகமும் இவர்கள் கண்முன் தென்பட்டது. கிரேக்க மெப்ப்பொருளியல் அறிஞர்களின் புதிய உலகமும் இவர்கட்கு எதிர்ப்பட்டது. பல நகர்களில் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்பெற்றன. இளைஞர்கள் புதிய பார்வையில் கல்வியைப் பெறப் பெற அறிவுலகத்தை முடியிருந்த இருட்படலம் கலையத்