பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற்கூட்டத்தில் சில மரபுகள் - (2) 109 குறிப்பாகக் கூறித் தோழி வரைவுகடாவுவாள். இற்செறிப்பு என்பது, தலைவனைச் சந்தித்க இடமின்றிப் பெற்றோர் தலைவியை அவள் வயது முதிர்ச்சி கோக்கி வீட்டினுள் இருத்துகையாகும். இதனை மணிவாசகப்பெருமான், சவிளை யாட கறவிளை வோர்ந்தெமர் மால்பியற்றும் வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கியெம் மெல்லியலைப் போய்விளை யாடல்என் நாள் அன்னையம்பலத் தான்புறத்தில் திவிளையாடகின் றேவிளை யாடி திருமலைக்கே.ே என்று விளக்குவர். தேனிக்கள் பறந்து விளையாடுவதைக் கொண்டே தேனினது விளைவை ஒர்க்தறியும் எம்முடைய தமரைப் போலவே, எம்முடைய அன்னையும் எம் தலைவியை உற்று கோக்கி (அவள் உடல் வேறுபாட்டினைக் கண்டு). இனி திருமலைக்கண் புறம்போய் விளையாட வேண்டா என்றாள்' என்று தோழி தலைவி யின் இச்செறிப்பைக் குறிப்பாற் புலப்படுத்துவதைக் காண்க. இனி, வெளிப்பட வரைவுகடாதல் என்பது என்ன என்பதைக காண்போம். தோழி தலைவனிடம் அவர்கள் களவொழுக்கம் ஊராரால் அறியப்பெற்று, முதலில் அம்பலாக முளைத்துப் பின் அலராக வளர்ந்தது என்று கூறி இனி வரைக்துகொள்வதில் காலம் தாழ்த்தல் கூடாது என்று வெளிப்படையாகவே கூறுவாள். பரவாத களவை அம்பல் என்றும், களவை அலர் என்றும் கூறுவர் பேராசிரியர். அம்பல் என்பது, முகிழ் முகிழ்த்தல் என்றும், அலர் என்பது, சொல் கிகழ்தல் என்றும் உரைப்பர் கச்சினார்க் கினியர். இறையனார் களவியலுரையாசிரியர், *அம்பல் என்பது, சொல் நிகழாதே முகிழ்முகிழ்த்துச் சொல்லுவதாயிற்று : இன் னதின் கண்னது என்பது அறியலாகாது என்பது. அலர் என்பது, இன்னானோடு இன்னாளிடை இது போலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது. அம்பல் என்பது, பெரும் போதாய்ச் சிறிது கிற்க அலரும் என கிற்பது. அலர் என்பது அப்பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்த்தாற்போல கிற்கும் கிலைமை யென வேற்றுமை சொல்லப்பட்டதாம்,' என்று மேலும் விளக்கு வர். அலர் அலரறிவுறுத்தலை, —i. திருக்கோவை - 13 .ே திருக்கோ - 180 - இன் உரை. களவியல் - 48 இன் உரை (5க்.) நூற்பா - 22 - இன் உரை.