பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

χίν களில் பங்கு கொண்டனர்: வயிரக் குப்பாயங்கள் அமைத்தனர்; கண்டன கண்டனங்கள் இயற்றினர்; இலக்கணச் சூறாவளிகள் போன்ற பல சூறாவளிகள் எழுந்தன. தமிழ்நாடெங்கும் வாதீப சிங்கங்களும், பரசமயக் கோளரிகளும், தருக்கப் புலிகளுமாக கிரம்பியவண்ணமிருந்தனர். இறைவனது இயல்பு, உயிர்களின் இயல்பு, ஐந்து பூதங்களின் இயல்பு ஆகியவை துருவித்துருவி ஆராயப்பெற்றன. முத்தியின் இயல்பு ருேம் உப்பும் கலந்தது போன்றதா அல்லது நீரும் பாலும் கலந்தது போன்றதா என்பது பற்றிப் பெரும் போர்கள் விளைந்தன. எங்குப் பார்த்தாலும் சொல்மசரிகள் நடைபெற்றவண்ணமிருந்தன. அறிவுபற்றிய அனைத்திலும் சமயம் கொடுங்கோலாட்சி புரிந்து வந்தது என்று சொல்லுவது மிகையன்று. வடமொழித்தருக்க சாத்திரங்களும் மெய்விளக்க நூல்களும் இக்தக் கொடுங்கோலாட்சிக்குத் துணை புரிக்தன: எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போன்ற நிலையை உண்டாக்கின. அறிவு விளக்கத்தை காடிச் சென்றவர் கள் இருட்படலத்தினுள் சிக்கிக்கொண்டு தத்தளித்தனர்; குளிக்கப் போய்ச் சேற்றை வாரிப் பூசிக்கொண்டது போன்ற நிலையை மக்கள் அடைந்தனர். ஆறு கோடி மாய சக்திகள் வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின: ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி காத்தழும் பேறினர்: விரத கேபர மாகவே தியரும் சரத மாகவே சனத்திரங் காட்டினர்; சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அஏற்றி மலைந்தனர்; மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் கழித்தடித் தார்த்து உலோகாயதம்எனும் ஒண்திறல் பாம்பின் கலாமே தத்த கடுவிடம் எய்தி அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்: என்று மணிவாசகப்பெருமான் காட்டிய சூழ்நிலையைப் போன் نان ஒரு நிலை இங்கும் காணப்பெற்றது. வீணான வாதப் போர் களில் மக்கள் காலங் கழித்தனர்: எம்மருங்கும் குதிர்க்க மயம்; விதண்டா வாதங்கள்: 2. திருவாச. போற்றித் - அடி 44.57