பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. முறையுடைப் பேச்சு 'அறத்தோடு கிற்றலை முன்னர்க் குறிப்பிட்டோம். அதனை சண்டு விளக்குவோம். சிறந்த நாடகத்தில் வரும் மாந்தத் பேசும் போது ஒரு வரையறைக்குள் நின்றுதான் பேசுவர் : ஒரு கட்டுப்பாட்டினுள் இருந்து பேசுமாறுதான் நாடக ஆசிரியன் அவர்களை இயக்குவான். அது போலவே, காடக வழக்காகப் புலவன் படைத்து மொழிநீதி ஐக்திணை கெறியில் காணும் மாக் திரும் ஒர் எல்லைக் கோட்டினுள் கின்றுகொண்டுதான் பேசுவர் , பேசும் பேச்சுகளையும் அளத்துதான் பேசுவர். தேவையற்ற சொற். களைக் கூறியோ, முறையற்ற சொற்களைச் சிந்தியோ நிகழ்ச்சி களின் தரத்தைக் குறைப்பதில்லை : ஒழுங்கு தவறிப் பேச வேண்டாதவரிடமும் பேசுவதில்லை. இவ்வுலக விவகாரங்களில், சிறப்பாக அரசியல் ஆட்சி முறையில் இவ்வொழுங்கு முறையை காம் காண்கிறோம். ஆங்கிலத்தில் Proper Channel (முறையோடு சேல்லுதல்) என்று சொல்லுகின்றோமே, அதைப் போலவே இந்த மு ைரயில் இன்னின்னார், இன்னின்னாரோடு, இன்னபடிதான் பேச வேண்டும் என்ற முறையையும் அகப்பொருள் உலகைப் படைத்துக் காட்டும் கவிஞன் கூறியுள்ளான். இந்த ஒழுங்கு முறையையும் தொல்காப்பியம் ஆங்காங்கு குறிப்பிடும். இதை ஒரு சிறிது ஈண்டு ஆசய்வோம். தமிழ் நூல்கள் விரித்துப் பேகம் காதல், தெய்விகக் காதல் என்பதை காம் முன்னர் அறிக்தோம். அத்தகைய காதல் உலகில் காம் சக்திக்கும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்கள் கற்பனை உலகத்து மாந்தர்கள் : இன்னார் என்று சுட்டிப் பெயர் கூறி உணர்த்தப்படாதவர்கள். காதலை யாருடனாவது சார்த்திச் சொன்னால் அதன் தூய்மை கெட்டுவிடும் என்று எண்ணின தமிழர்கள், அக்காதல் நாடகத்தில் தலைவன் தலைவியராகத் திகழ் பவர்களைச் சிறந்த கிலையில் வைத்துக் காட்டுவர். ஊழின்வலியால் சக்தித்து ஒருவருக்கும் தெரியாமல் களவு முறையில் மணம் செய்து கொண்ட இவர்களின் ஒழுக்கத்தை உலகோர் அறிய வேண்டியது. அவசியம், அக்தச் செய்தி எவ்வாறு வெளியாகின்றது ?. எக்த: