பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையுடைப் பேச்சு - 133 என்ற நூற்பாவினால் அறியலாகும். இக்கூறியவறறால் வேலனது கழங்கு பார்த்தலாலும் வெறியாட்டாலும் கட்டுவிச்சியின் கட்டெடுத் தலாலும் குறி கேட்டல் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்த தமிழ் வழக்காறுகள் என்பது தெளிவாகும், இன்றும் கடன்மலை காட்டில் வழக்கிலிருக்கும் வேலன் துள்ளல் என்ற ஒரு வகை வெறியாட்டினைப் பழைய வெறியாட்டே என்று கருத இடமுண்டு. இங்ங்னம் பழைய இலக்கியங்களும் இன்று திரிபாக நடைபெற்று வரும் ஒரு சில வழக்கங்களும் பழைய வழக்காறுகளைத் தெரிவிக் கின்றன.