பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் சில அகத்திணை மரபுகள் 137. கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பு" 'மருதஞ் சான்ற மருதத் தண்டனை' 'முல்லை சான்ற முல்லையம் புறவு' 'பாலை சான்ற சுரம்'ே என்று சான்றோர் செய்யுள்களிலும் பூ அல்லது அதன் முதற் பொருளின் சிறப்புப்பற்றி அங்கிலங்கள் கூறப்பெறுதலை அறிக. இறையனார் களவியலுரையாசிரியரும் கச்சினார்க்கினியரும் இங்கிலப்பெயர்கள் அவற்றின் ஒழுக்கமாக-மேலே கூறிய உரிப் பொருள்களடியாக-வழங்கலாயின என்று கூறுவர். அஃதாவது, முல்லைக்குரியதாகப் புலனெறி வழிக்காகக் செய்யப்பட்ட ஒழுக்கம் "இருத்தல்' என்பது; இவ்விருத்தற்கே முல்லை என்பது ஒரு பெயர் என்பதாகும். களவியலுரையாசிரியர், ஒழுக்கமே தினை எனப்படும். குறிஞ்சியாகிய ஒழுக்கம் நிகழ்ந்த நிலமும் குறிஞ்சி எனப்பட்டது; என்னை: விளக்காகிய சுடர் இருந்த இடனும் விளக்கு எனப்பட்டது போல் என்பது” என்று கூறியுள்ளதைக் காண்க: ஏனைய நிலங்கட்கும் இவ்வாறே கூறிக்கொள்ளலாம். இவற்றால் முல்லை, குறிஞ்சி என்று கூறப்பெற்ற ஒழுக்கங்களால் காடு, மலை முதலியவை அப்பெயர் பெற்றன என்பது அவ்வுரை யாளரின் கருத்தாகத் தோன்றிலும், அவ்வொழுக்கக்தான் அவ்வாறு பெயர் பெற்றதன் காரணம் என்னை? என்ற வினா திரும்பவும் எழக்கூடியதாகின்றது. அதனால் நிலங்கள் முற்குறித்த படி பூக்களினடியாகப் பெயர் பெறாது போயினும், அங்கிலத்தொழுக் கங்களேனும் அவை படியாக வழங்கலாயின என்று கூறுதல் வேண்டியதாகின்றது. ஆயின், கச்சினார்க்கினியர், இவ்வாறன்றி முலலை முதலிய பூவாற் பெயர் பெற்றன. இவ்வொழுக்கங்க ளெனின், அவ்வங்நிலங்கட்கு ஏனைய பூக்களும் உரியவாகலின் அவற்றாற் பெயர் கூறுதலும் உரிய எனக் கடாயினார்க்கு விடை யின்மை உணர்க' என இக்கொள்கையை மறுத்திட்டனர். ஆயினும், ஒவ்வோரொழுக்கத்தை உணர்த்தற்கு ஒவ்வொரு பூவை அடையாளமாகக் கொண்டொழுகுவது பண்டைத் தமிழிாது வழக்கமேயாகும். இது புறத்தினையொழுக்கமாகிய கிரை கவர்தல், மீட்டல் முதலியவற்றிற்கு வெட்சி, கரந்தை முதலாகிய பூக்களை அறிகுறியாகக் கொண்டமையாலும் உறுதிப்படும். கச்சினார்க்கினியரும், இதற்கு (வெட்சிக்கு) அப்பூச்சூடுதலும் 13. மதுரைக்-அடி 300. 14. சிறுபாணா-அடி 186. 15. டிை-அடி 169 16. டிை-314. 17. இறை. களவியல் - நூற்பாவின் உரை.