பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I #3 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை இசங்கலுக்கேற்ற நிலைக்களன் நெய்தலாயிற்று. இவ்வாறு இவற்றிற்கு இன்னும் ஏற்புடைய காரணங்கள் உளவேனும் அவற்றையும் கூறிக்கொள்ளலாம்.' களவு வெளிப்படுதல் : அம்பலும் அலருமே களவு வெளிப் படுதற்குக் காரணமானவை இவை இரண்டைப்பற்றி முன்னரே விளக்கியுள்ளோம். அம்பல் என்பது முகிழ்த்தல், அஃது ஒருவ ரொருவர் முகக்குறிப்பினால் தோற்றுவித்தல், அலராவது: சொல்லுதல். இக்த இரண்டிற்கும் தலைவனே காரணமாவான் என்று கூறுவர் ஆசிரியர். இதனை, அம்பலும் அலருங் களவுவெளிப் படுத்தலின் அங்கதன் முதல்வன் கிழவ னாகும்.’’ என்ற நூற்பாவால் அறியலாம். தலைவனை அறிந்துழியல்லது அம்பலும் அலரும் சிகழா. தலைவியின் வேறுபாட்டான் ஆகாதோ எனின், ஆண்டு எற்றினான் ஆயிற்று என ஐயம் நிகழ்தல் அல்லது துணிவு பிறவாது என்பதாக இளம்பூரணரும் கச்சினார்க்கினியரும் இனிது விளக்குவன். இக்களவு வெளிப்படுதலிலும் ஒர் வரையறை உண்டு; ஒர் ஒழுங்கு முறையும் உண்டு. இதனை ஒரளவு முன்னரே நன்கு விளக்கியுள்ளோம். ஈண்டு அதிலுள்ள நுட்பத்தினைக் குறிப்பிடு வோம். தலையின் களவு ஒழுக்கத்தை அவள் தங்தையும் தன்னையரும் குறிப்பினாலேயே உணர்வர் என்பது ஆசிரியரின் கருத்து: ஒருவர் கூறக் கொள்ளாது உய்த்துக்கொண்டுணர்வர். "தங்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப. 4 (முன்னம் - குறிப்பு.) என்பது தொல்காப்பிய நூற்பா. கற்றாய் அறத்தொடு நின்ற வழி அவர்கள் உண்மை நிலையைக் குறிப்பினால் உணர்த்துவர். இருவர்கட் குற்றமும் இல்லையா லென்று நெருமந்து சாய்த்தார் தலை. " 21. இராகவய்யங்கார், மு : தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி - பக். (23 - 24) 22. களவியல்-நூற்பா 49. (இளம்) 23. முறையுடைப் பேச்சு என்ற கட்டுரையில். 2.சி. களவியல் - நூற் 47. (இளம்.) 25, கலி - 39.