பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் சில அகத்திணை மரபுகள் í 43“ எல்லார்க்கும் பொதுவாக்கி இடமும் காலமும் கியமித்துச் செய்யுட் செய்தல் ஒப்புமைகோக்கிச் செய்யப்பட்டதாகலின்' என்று கூறுதல் காண்க." மேலும் அவர், மேற்குறிப்பிட்ட நாடக வழக்கினும்’ என்ற நூற்பாவிற்கு உரை கூறுங்கால் புனைந்துரை வகையாற் கூறுபவென்றலிற் புலவர் இல்லனவுங் கூறுபவலோவெனின், உலகத்தோர்க்கு நன்மை பயத்திற்கு நல்லோர்க்குள்ளனவற்றை ஒழிந்தோர் அறிந்தொழுகுதல் அறமெனக் கருதி அக்கல்லோர்க் குள்ளனவற்றிற் சிறிது இல்லனவும் கூறுதலன்றி யாண்டும் எஞ்ஞான்றும் இல்லன கூறார் என்றற்கன்றே நாடகம்' என்னாது வழக்கு’ என்பாராயிற்று’ என்றும், "இப்புலனெறி வழக்கினை இல்லது இனியது புலவரால் நாட்டப்பட்டதென்னாமோ வெனின் இல்லது என்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து இன்பம் செய்யாதாகலானும், உடன் கூறிய உலகியல் வழக்கினை ஒழித்தல் வேண்டுமாகாலானும் அது பொருந்தாது' என்றும் கூறியுள்ளதை நாம் சிந்தித்து அறிதல்வேண்டும். எனவே, தொல்காப்பியர் கூறி யுள்ள அகப்பொருள் விகற்பங்கள் யாவும் புனைந்துரை வகையால் புலவர்கள் பாடிவைத்த உலகியல்களே என்பது வெளிப்படை. கூற்று நிகழும் முறை : அகப்பொருளில் களவிலும் கற்பிலும் கூற்று நிகழ்த்துவதற்குரியோர் இன்னார் என்று முன்னர் விளக்கி னோம். அஃதாவது, பார்ப்பான், பாங்கன் முதலியோர் சொல்வ தாகப் பாட்டுகள் புனையப்பெறும். ஆனால், உள ரார், அயலார், சேரியார், கோய்மருங்கறிகர், தந்தை, தன்னை ஆகிய அறுவரும் கூறுவதாகச் செய்யுள் செய்யும் வழக்கம் இல்லை. ஊரும் அயலும் சேரி யோடும் கோய்மருங் கறிநருங் தந்தையும் தன் ஐயும் கொண்டெடுத்து மொழியப் படுத லல்லது கூற்றவண் இன்மை .ாப்புறத் தோன்றும்.?? என்ற நூற்பாவால் இதனை அறியலாம். அஃதாவது. இவர் கூற்றாகப் பிறர் சொல்லின் அல்லது இவர்தாம் கூறார் என்பது கருதது. பேராசிரியரும், கொண்டெடுத்து மொழியப் படுதலல்லது’ என்பது, இவர் கூற்றாகப் பிறர் சொல்லின் அல்லது இவர்தாம் கூறார் என்றவாறு’ என்று கூறியிருத்தல் ஈண்டு அறியத்தகும்.' எடுத்துக்காட்டாக, 32 அகத்திணை நூற் 3-இன் உரை (நச்.) 33. செய்யுளியல் - நூற் 183 (இளம்.) 34. செய்யு - நூற் 191 :பேரா.)