பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. திருமண முறைகள் தலைவியுடன் களவுக்கூட்டம் கூடி வந்த தலைமகன் அவனை மணந்துகொள்வதில் இருமுறைகள் உள்ளன. அவை களவு வெளி படுவதற்கு முன் வரைதல், களவு வெனிப்பட்ட பின் வரைதல் என்பன. இதனை, வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்(று) ஆயிரண் டென்ப வசைதி லாறே, என்ற நூற்பாவால் அறியலாம். தலைவி அறத்தொடு கின்றதை எல்லோரும் ஒத்துக்கொண்ட பின் மணக்துகொள்ளுதல் களவு வெளிப்பட வரைதல் ஆகும். இதற்கு முன்னர்க் கூறியவை யாவும் இப்பகுதியைச் சேர்ந்தவை. களவு வெளிப்படா முன் வரைதல் என்பது, தலைமகள் அறத்தொடு கில்லாமுன் தலைவன் தலைவியை உடன்கொண்டு சென்று தன்னுசரில் மணத்துகொள்வ தாகும். இயற்கைப்புணர்ச்சி, இடங்தலைப்பாட்டுடன் மணந்து கொள்வதும் இப்பகுதியின்பாற்படும். பகற்குறி இரவுக்குறிகட்கும் பின் தோழியால் வரைவுகடாவப் பெற்று நிகழ்வதையும் இதன் பாற்படுத்துவதும் உண்டு. இவ்வாறு வரைந்துகொள்வதில் தலைவிக்கு உடன்போக்கில்லை என்பது அறியத்தக்கது. இவற்றை இறையனார் களவியலுரையாசிரியர் இவ்வாறு விளக்குவர்: களவு வெளிப்பட முன்னுற வரைதல் என்பது, பல ரானும் சிலரானும் அறியப்பட்டது இவ்வொழுக்கம் என்னும் கருத்து எய்தா முன்னம் வரைதல் என்றவாறு இயற்கைப் :புணர்ச்சி புணர்ந்த பின்னே தெருண்டு வரைதலும் உரியன்; அங்குத் தெருளானாய்விடின், பாங்கற்கூட்டம் கூடித் தெருண்டு வரைதலும் உரியன்; அங்குத் தெருளானாப் விடின், தோழியை இரத்து, பின்னின்று, அவள்தினையுறாத்தகைமை செய்யத் தெருண்டு வரைதலும் உரியன்; அங்குத் தெருளானாய்விடின் மதியுடன் 1. களவியல்-நூற். 50. (இளம்.)