பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முறைகள் - 計さ3 என்பதை இளம்பூரணரும் Bச்சினார்க்கினியரும் ஓதல், பகை, துரது என்றே பொருள் கூறியுள்ளனர். களவு வெளிப்பட்டபின் வரைதல் : "உடன் போக்கின் இறுதி யில் தலைவியின் சுற்றத்தார் தலைவியின் கற்பொடு புணர்ந்த கெளவை’யை கேரில் அறிந்ததும் உடன்போக்கிற்கு ஒருப்பட்டுத் தம்மூர் மீள்வர் என்று குறிப்பிட்டோமன்றோ? தலைவன் தலைவி யைத் தன்னுர்க்கொண்டு சேர்ப்பன். சில காள்களுக்குப் பின்னர்த் தலைவியின் தமர் தலைவியின் இருப்பையறிந்து தலைவனை நெருங்கி அவனைத் தம்மூரகத்தே மணம் புரிந்துகொள்ளும்படி வேண்டுவர். அவ்வேண்டுகோளுக்குத் தலைவன் உடன்பட்டால், அவன் தலைவியின் ஊரையடைந்து அவளை வதுவை புரிந்து வாழ் வுறுவன். இனி, உடன் போக்கில் தலைவியின் தமர் இடைச்சுரத் தில் தடைபுரியாமலும், அவர் தலைவியின் இருப்பையறிந்து வந்து தலைவனை மணம் புரிந்துகொள்ளுமாறு வேண்டாமலும் போவா ராயின், தலைவன் அவளைத் தன் மனையில் வைத்து வதுவை மணம் புரிந்துகொள்வான். இம்மண நிகழ்ச்சிக்கு முன்னர்த் தலைவ இடைய தாய் அவனால் கொண்டுவரப்பெற்ற தலைமகளின் பொருட்டுச் சிலம்புகழி நோன்பு’’ என்பதொன்று செப்தல் பண்டைய மரபாக இருந்தது. மணம் புரிவதற்கு முன்னர் மன மகளது காலில் பெற்றோர்கள் அணிந்திருக்த சிலம்பை நீக்கு வதற்குச் செய்யப்பெறும் சடங்கே சிலம்புகழி நோன்பு என்பது. இதனை, தும்மனைச் சிலம்பு கழிஇ அயரினும் எம்மனை வதுவை கன்மணங் கழிகெனச் சொல்லின் எவனோ மற்றே வென்வேல் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே.சி (அயரினும் - சடங்கு செய்த போதிலும் : சொல்லின் எவனோ சொன்னால் வரும் குற்றம் என்ன வென் . வெற்றி மையற - குற்றமில்லாதபடி : பொய்வல்காளை பொப் கூறுதலில் வல்ல தலைவன்.) என்ற ஐங்குறுநூற்றுப் பாடலால் அறியலாம். தலைவியை உடன்கொண்டு போன தலைமகன் மீண்டு தலைவியைத் தன் இல்லத்துக் கொண்டு புக்குழி அவன் தாய் அவட்குச் சிலம்பு கழி கோன்பு செய்கின்றாளெனக் கேட்ட கற்றாப் ஆண்டு கின்றும். 4. ஐங்குறு - 399.