பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முறைகள் 155. அவர் உடன்பாடு பெற்றே மணம் புரிவிப்பர். இன்று இத்தகைய முறை தமிழர்களிடையே பெருவழக்காக இருப்பதை அறியலாம். கற்பு உேற்கூறியவாறு அன்புரிமை பூண்ட தலைமகள் தன்பால் அன்புடைய தலைவியைப் பெற்றோர் கொடுப்பப் பலரறிய மணந்து வாழும் மனை வாழ்க்கையே கற்பென வழங்கப் பெறும். கற்பு களவொழுக்கத்தின் கனி அன்பின் வெற்றி. கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மசபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மசபினோர் கொடுப்பக்கொள் வதுவே.9 என்பது தொல்காப்பியர் வீதி, ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் கல்லுழின் ஆணையால் எதிர்ப்பட்டு உள்ளப் புணர்ச்சியிற் கூடி ஒழுகினராயினும், தலைமகளுடைய பெற்றோர் உடன்பாடின்றி அவ்விருவரும் மனைவாழ்க்கையை மேற்கொள்ள இயலாது. ஆகவே, ஒருவரையொருவர் பிரியாது வாழ்தற்குரிய உள்ளத்துதுதியை உலகத்தார் அறிய வெளிப்படுத்தும் கியதியாகிய வதுவைச் சடங்குடன் தலைமகளை மணந்துகொள்ளுதல் மனை வாழ்க்கைக்கு இன்றியமையாத சிறப்புடைய கிகழ்ச்சியாக அமைந்தது. இவ்வாறு உள்ளப்புணர்ச்சியளவில் உரிமை ஆண்டொழுகிய தலைவனும் தலைவியும், உலகத்தார் அறிய மனையறம் கிகழ்த் துதிற்கு உரிமை செய்தளிக்கும் செயல் முறையே பண்டைத் தமிழரின் திருமணச் சடங்காகும். இதனை ஆசிரியர் தொல்காப்பியர் கரணம் என்ற சொல்லால் வழங்குவர். கற்பு - விளக்கம் : கணவனைவிடச் சிறக்த தெய்வம் மனை விக்கு இல்லை என்றும், அவனை இன்னவாறு வழிபடுதல் வேண்டுமெனவும், தலைமகளுக்குப் பெற்றோர் கற்பிக்கின்றனர். அக்தனர், சான்றோர், அருந்தவத்தோர், விருத்தினர் முதலியவர்.பால் இன்னவாறு கடந்துகொள்ளுதல் வேண்டும் என்று தலைமகளுக்குத் தலைவன் கற்பிக்கின்றான். இதனைத் தொல்காப்பியர், அத்தணர் திறத்தும் சான்றோர் தேளத்தும் அத்தமில் சிறப்பில் பிறர் பிறர் திறத்தினும் ஒழுக்கங் காட்டிய குறிப்பினும்’’’ என்று குறிப்பிடுவர். 9. கற்பியல் - நூற்பா 1. 10. கற்பியல் நூற். 5 (அடி15 - 17)