பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முறைகள் - 157 பூரண பொற்குடம் வைகக மணிமுத்தம் பொன்பொதித்த தோரண நீடுக துரியம் ஆர்க்கதொன் மாலயற்குங் காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் தில்லையன்ன வாரண வும்முலை மன்றலென் றேங்கு மனமுரசே, 4 என்ற திருக்கோவையாரின் அழகிய பாடலில் இத்துறை வந்தமை காண்க. மேற்கூறியவாறு வரவேற்றபின், அவர்கள் விரும்புமாறு பணிந்தொழுகி அவரவர்க்கு வேண்டும் இருக்கையும் சிற்றுண்டி முதலாயினவும் இனிது கொடுத்துரட்டி அளவளாவுவர். அனைத்தும் இனிமையாய் கடக்தேறியபின் எல்லோரும் ஒரழகிய கூடத்தில் ஒருங்கு அமர்ந்து, எல்லாம் வல்ல தம் வழிபடு கடவுளை அன்பினால் உருகி வழுத்தி, வக்தவர் கருத்தறிந்து இருந்தவர் பெண் கொடுத்துத் திருமணம் கடப்பித்தற்கு ஒரே தினைவாய் உளம் கேர்வர். ஊழ்வலியால் கடைபெற்ற களவினை நுணுகியறியும் ஒள்ளறிவுசாலா வெள்ளறிவுடையராக இருக்கும் தலைவியின் தமர் "பரியம் வேண்டும் என்று கூறுவர் ; அவர் விரும்பியவாறு அதனை நிரம்பக் கொடுக்காவிட்டால் நாள் பார்த்து வரல் வேண்டும்”, “புள்திருத்தி (சகுனம் பார்த்து) வால் வேண்டும்’ என்றும், பிறவாறும் கூறிப் பெண் கொடுக்க. இசையார். இன்னும் அவர் நாங்கள் எங்கள் மகளுக்கு இந்த யாண்டில் திருமணம் செய்ய இயலாது ; இனி வரும் யாண்டில்தான் அதனை முடித்தல் வேண்டும்’ என்று கூறியும் மறுப்பர். இதனை, வரைவெதிர் கொள்ளாது தமரவண் மறுப்பினும் 5 என்னும் இறையனார் கூற்றாலும் “பரியஞ் சிறியதென்றானும், இளையளால் என்றானும், காளும் புள்ளும் திருத்தி வாரிரோ என்றானும் அங்ங்னம் மறுத்தார் என்ப" என்னும் உரையாலும் அறியலாம் . இத்திருமண வாணிகம் இன்றும் கடக்கின்றது அன்றோ அறிவும் அறியாமையும் என்றும் விரவியிருத்தல் உலக இயல்பு என்ற உண்மையை நாம் அறிவோமாயின் இக்காரனம் 14. திருக்கோவை-296. 15. இறை. களவி - நூற் 29. - 16. இறை. கள. நூற்பா-29-இன் உரை.