பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

憲6泰 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை விலும், அவனறிவாற்ற அறிவும’ என்ற கற்பியல் நூற்பாவிலும் தொகுத்துக் கூறியுள்ளார். இந்த நூற்பாக்கள் முறையே தலை வனுக்கும் தலைவிக்கும் கூற்றுகள் கிகழும் இடத்தைக் கூறுபவை. இவற்றில் காணும் செய்திகள் சில தொல்காப்பியர் காலத்து வழங்கிய இல்லற முறைகளை விளக்குகின்றன. - அவற்றுள், "கரணத்தின் அமைந்து முடிந்த காலை நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சி’ என்பது ஒன்று. ۔* தமிழர் மணமுறையில் நிகழ்தற்குரிய கரணங்கள் இவையென் பது தம் காலத்தில் வாழ்ந்த எல்லோர்க்கும் நன்கு தெரியுமாதலின் அவற்றை ஆசிரியர் தொல்காப்பியனார் தம் நூலில் விரித்துக் கூற வில்லை. ஆயினும், தொன்றுதொட்டுத் தமிழர்கள் கொண்டொழு கிய திருமணச் சடங்குகள் சிலவற்றை அகம்-86, 136 பாடல் களால் ஒருவாறு உணரலாம். இதற்கு கச்சினார்க்கினியர் கூறும் “வேள்வியாசான் காட்டிய முறையே அங்கி சான்றாக நிகழும் சடங்கு முறை தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காணப் பெறவில்லை. எனவே, ஆசிரியர் மேற்கொண்ட திருமண முறைக் கும் தமிழர் கொண்டொழுகிய திருமணச் சடங்கு முறைக்கும் பெரிதும் வேறுபாடுண்டு என்பது அறிதற்பாலது. இதனை, ஒத்துடை பக்தணன் எரிவலஞ் செய்வான்போல்’ல் என்ற கலித்தொகைச் சொற்றொடராலும் உறுதிப்படுத்தலாம் இதில் புரிநூல் அந்தணராகிய,வேதியரது வேள்விச் சடங்கு உவம்ை பாக எடுத்துரைக்கப்பெறுகின்றது. இதனை ஊன்றி நோக்கின் இங்ங்ணம் எரிவலம் வருதல் ஒத்துடையக்தணசாலன்றி ஏனைய தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பெறாத சடங்கென்பது கன்கு புலனாகும். ஆனால், இளம்பூரணர், கரணத்தின் அமைந்து முடிந்தகாலை என்பதற்கு ஆசான் புணர்ாத கரணத்தினால் வதுவை முடிந்தபின்’ என்று கூறுவர். இவர் தமிழர் முறைப்படி கடைபெற்ற வதுவை மணத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். கெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சி தலைவியைத் தலைவன் கண்ணுற்ற ஞான்று தலைவன்மாட்டு உளதாகிய பெருமையும் 4, நூற்பா.5. 5. நூற்பா-5, 5. மருதக் கலி-A (அடி-5),