பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவொழுக்கம் - 6& இதில், நம் தலைவரேயன்றிச் சுற்றத்தாரும் நோற்று ஒரு கருப்பம் தங்கிய கினது வயிற்றைக் கண்டு உவக்தெனவும், அதற்கேற்ற சடங்கு செய்துமென்றார் எனவும், முற்காலத்து நாம் கேட்ப கமக்குக் கூறிய முனிவர் சொல்லும் உண்மையாயிற்றெனவும்: கூறியவாறு காண்க. இது தோழி கூற்று. புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதில் கெப்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் செப்பெருஞ் சிறப்பொடு சேர்தல்” (புனிறு-வாலாமை, ஈன்றணிமை; ஐயர்-முனிவர்; அமரர் - தேவர்.) - என்பது ஏழு. சிறப்பெய்தி மகப்பேறு பெற்று ஈன்றணிமை சேர்ந்த காலத் தில் எண்ணெய் ஆடும் தலைவியை முகமன் கூறுதற்கு முனிவர்" மாட்டும் தேவர்கள் புதல்வனைப் பாதுகாத்தற்பொருட்டும். செய்யும் பெரிய சிறப்புகளைக் குறிப்பது இப்பகுதி. அப்பொழுது செய்யப்பெறும் சிறப்புகளாவன: பிறந்த புதல்வன் முகம் காண்டல், ஐம்படை பூட்டுதல், பெயரிடுதல் முதலியன. குழந்தை பிறந்த பின் தாய் எண்ணெய் ரோடல், பாட்டன் பாட்டியார் குழந்தைக்குப் பெயரிடல், இரவலருக்குப் பரிசில் வழங்கல், குழந்தையைக் காக்க என்று இல்லுறை தெய்வ வழிபாடு செய்தல் முதலியவை இக்காலத்திலிருப்பதைப் போலவே அன்றும் இருக்தமை இதனால் அறியக்கிடக்கின்றது. இத்தகைய மலிவு பற்றிய பல செய்திகள் தொல்காப்பியத்தில் காணப்பெறுகின்றன. இரண்டாவது : புலவி, ஊடல், உணர்வு. இவை மூன்றும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத பொருண். மைகளாகும். இவற்றுள், 'புலவி அண்மைக்காலத்தது. ஊடல் அதனின் மிக்கது’ என்பர் இளம்பூரணர்." உணர்தல் என்பதை "ஊடலை அளவறிந்து நீங்குதல்’ என்று குறிப்பர் பரிமேலழகர்.' கற்பில் இவையே சிறந்த பகுதியாகும்; உளவியல் நுட்பமும் செறிந்தபகுதியுமாகும்.காதலர்களின் உள்ளக்கிடக்கையைஅப்படியே படம் பிடித்துக் காட்டுவது இப்பகுதி. தலைவன் தலைவியர்க் கிடையே நிலவும் அன்பு எத்தகையது என்பதைக் காட்டவே கமது: 13. கற்பியல்-நூற். 15-இன் (உரை) 14. குறள்-1109-இன் (உரை)