பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் வாழ்வில் கேரிடும் பிரிவுகள் 183 உலகளவு என்று ஆன்றோர் கூறியிருக்கவில்லையா ? இன்று கூடப் பல பட்டங்களைப் பெற்று ஆராய்ச்சித் திறன் மிக்க அறிஞர்கள் வெளிநாடு சென்று, பல அறிவியல் துறைகளிலும் பொறி நுட்பத் துறைகளிலும் தொழில் நுணுக்கத் துறைகளிலும் மேலும் கற்று வருவதைக் காண்கின்றோமன்றோ ஒதற்பிரிவு” என்பதற்கு இளம்பூரண்ர், “தமது காட்டகத்து வழங்காது பிற காட்டகத்து வழங்கும் நூல் உளவன்றே, அவற்றினைக் கற்றல் வேண்டிப் பிரிதல்' என்று கூறியிருத்தல், இன்று வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பெறும் வழக்கத்தை நினைவுபடுத்துகின்றது. இங்ஙனம் அறிதோறும் அறியாமையைக் காட்ட வல்ல ஒப்பற்ற கல்விச் செல்வத்தைப்பெறச் செல்வோரைப் பானர் என்ற சங்கப் புலவர், கைதொழு மரபில் கடவுள் சான்ற செய்வினை மருங்கும் சென்றோர். என்று குறிப்பிடுவர். கடவுள் சான்ற செய்வினை” என்பது ஒதற் பிரிவினை உணர்த்துகின்றது. இன்றுகூட மணவினை முடித்துக் கொண்ட மாணாக்கர்கள் - சிறப்பாகத் தொழிற்கல்லூரிகளில் - பயின்று வருவதை நாம் காணலாம். அவர்கள் யாவரும் ஒதற் :பிரிவில் உள்ளவர்களே, காவற்பிரிவு : காவற்பிரிவு என்பது காட்டைப் பாதுகாத்தற் பொருட்டுப் பிரியும் பிரிவு. இதனால் காட்டில் எளியோர்களை கலிவோர் உளர் என்று நினைக்க வேண்டியதில்லை. ஒரு காட்டில் பல இடங்களில் தமக்குள்ள குறைகளை நேரில் வந்து சொல்லு வதற்கு இயலாத மூத்தோர், பெண்டிச், இருக்கை முடவர், கூனர், குருடர், பிணியுடையோர் முதலியவர்கள் இருத்தல் கூடும். அவர் களை கேரில் சக்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டு, அவற்றினை ஓராற்றான் நீக்குவதற்பொருட்டுப் பிரிவது. காடுகளில் ஒன்றனை யொன்று கலியும் உயிர்ச் சாதிகளைக் கண்டு தீமை செப்வன வற்றை முறை செய்வதற்கும், கொடிகளில் சிக்குண்டு அல்லலுறுக் விலங்குகளைத் துறை நீக்குதற்பொருட்டும், வளம் குன்றிய இடங் களில் குன்றியதன் காரணத்தை ஆய்ந்து வளம் தோற்றுவித்தற் பொருட்டும், கோவில், சாலை, பொதுவிடங்கள் இவற்றினை ஆராய்வதற்கும், கல்குரவால் வருந்தும் குடிகளைப் புரத் தற் பொருட்இம் செல்வதைக் காவற்பிரிவு” என்று சொல்லுவர். தன்னால் பாதுகாக்கப்பெறும் உயிர்ச்சாதிகள், குடிகள் முதலியோ ளுக்குத் தன் உருக் காட்டுவதற்கும், ஒற்றுவத்துள்ள மாற் 4. அகம் - 125.