பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பெய்ததால் அது மணலில் மறைந்து முளைவிட்டுச் செடியாக, வளர்ந்தது; கொட்டையை மறக்துவிட்ட சிறுமி அச்செடியைக் கண்ட கான் முதல் அதனைத் தன் குழந்தையாகப் பாவித்துப் பாலும் கெப்யும் ஊற்றி வளர்த்து வந்தாள. இவள் மங்கைப் பருவம் கடந்து திருமணம் புரிந்துகொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கின்றாள். இவளுக்குப் பல குழந்தைகள் பிறக்கின்றன. முதல் குழந்தை பெண். இவள் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது புன்னை மரத்தைப் போல விட்ட இடத்தில் கில்லாமல் ஒடி பாடி விளையாடுவாள். பானைகளை உடைப்பதும் பாற்செம்பு. களை உருட்டுவதும் பிற குழந்தைகளை அலைக்கழிப்பதும் இவள் காள்தோறும் செய்து வரும் சிறுகுறும்புகள். இக்கிலையில் இவள் தாய் இவளைப் பார்தது, “உன் தமக்கையாகிய புன்னை மரத்தைப் பார். உன்னைப் போலவா குறும்புகள் செய்கின்றாள்? உனக்கு கட்டிலும் வெட்கம் இல்லை!’ என்று பன்முறை வற்புறுத்திச் சொல்வதுண்டு. பல முறை வற்புறுத்தித தனக்கு அறிவுரை கூறியதால் மகளும் அப்புன்னை மரத்தைத் தன் தமக்கையாகவே எண்ணி வாழ்க்தாள். இவளும் மங்கைப் பருவம் அடைந்து களவொழுக்கத்தில் ஒழுகி வரும் போது இவள் காதலன் ஒரு நாள் பகலில் இவளைச் சந்திக்க வருகின்றான். அவனைப் பார்த்து இவள் தோழி, 'எம் தமக்கையாகிய புன்னையின் எதிரில் உன்னோடு நகைத்து விளையாடி மகிழ்வதற்கு யாம் நானு: கின்றோம். இனி, தலைவியைச் சக்திக்க வேறு இடம் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்' என்று கூறிவிடுகின்றாள். இது பாடவில் வந்துள்ள செய்தி. இளம்பூரணர், "இதனுள் புன்னைக்கு காணுதும்’ எனவே, அவ்வழித் தான் வளர்த்த புன்னை என்றும் “பலகாலும் அன்னை வருவள்’ என்று உடனுறை கூறி விலக் கியவாறு' என்று விளக்கம் எழுதியுள்ளார். இதில் வந்த உடனுறை பகலில் இனி வாராதி" என்பதுவும், வரைந்துகொள்’ என்பதுவும். இதைச்சியினின்று தோன்றும் வேறு பொருள் : இறைச்சிப் பொருளினின்றும் தோன்றும் பொருளும் உண்டு என்பதற்குப் தொல்காப்பியர் விதி செய்துள்ளார். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்திடில் மருங்கில் தெளியு மோர்க்கே.8 என்பது அவர் கூறும் விதி. இதற்கு இளம்பூரணர் கூறும் பொருளே கேர்பொருள். “சொற்பொருளுக்குப் புறத்தே தோன்றுவதாகிய 8. பொருளியல் - நூற்பா 3A. (இளம்.)