பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைச்சிப் பொருள் 2O5 இறைச்சிப் பொருளினின்று தோன்றும் பொருளும் உள” என்பது அவர் கூறும் உசை அஃதாவது, குறிப்புப் பொருளினின்று தோன்றும் குறிப்புப் பொருளும் உண்டு என்பது இதன் கருத்து. இவ்வாறு தோன்றுவதை வடநூலார் வீசிதசங்க கியாயம் என்று கூறுவர். பொருளுமாருளவே என்று கூறுவதால், இவ்வாறு தோன்றும் பொருள் சிறுபான்மையாகவே இருக்கும் என்பது தெரி கின்றது. திறத்தியல் மருங்கில் தெளியு மோர்க்கே என்பதால், இபபொருளை உணரும் ஆற்றலுடையாரும் சிலரே என்பதும் போதரும். வடநூலாரும் குறிப்புப் பொருளை அறிதலே அருமை என்று கூறுவர். எல்லா, உதுக்காண் எழில்நீர்ப் பொப்கைப் பரந்த தாமரைப் பாசடைக் குருகு துலக்கமில் உடல தாகிப் பசுங்கலத்து வளையொளிர்க் தாஅங் கொளிசெய் வதுவே." (எல்லா-தலைவனே; உதுக்காண்-அதோ பார்: எழில்-அழகு; பொய்கை-குளம்; பாசடை-பசுமையான இலை; குருகு-காரை; துளக்கம் இல்-அசைதல் இல்லாத வளை-சங்கு.) என்ற பொய்கை வருனனைச் செய்யுளை இறைச்சிப் பொருளி னின்று பிறிதும் ஒரு பொருள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். தலைவனைப் பார்த்துக் கூறுவதாக உள்ளது, இப் பாட்டு. பசிய தாமரை இலையிலுள்ள நாரை அசையாது இருக் இன்றது என்பது துளக்கமில் உடல தாகி என்பதன் சொற் பொருள். அதனால் அக்தி இடம் மக்கள் நடமாட்டம் இல்லாதது” என்னும் குறிப்புப் பொருள் தோன்றும். அக்குறிப்புப் பொருளி லிருந்து, அவ்விடமே குறியிடத்திற்கு இயைபுடையது' என்னும் குறிப்பும், அதனால் புணர்ச்சி கெடிது நிகழ்தல் கூடும் என்ற குறிப்பும் தோன்றுதலை அறிதல் வேண்டும். எனவே, குறிப்புப் பொருளின் சிறப்பும் அதன் அருமையும் ஒருவாறு தெளியப் பெற்றது. குறிப்புப் பொருள் சொற்பொருளினின்றும் சிறக்கும் பொழுது அதனைத் தொனி’ என்று கூறுவர் வட நூலார். இளம்பூரணர், இறைச்சிப் பொருள் இருவகைப்படும் என்று கூறுவர். இவர் இறைச்சிப் பொருள் பிறிதுமோர் பொருள் கொள்ளக் கிடப்பனவும் கிடவாதனவும் என இரு வகைப்படும். 9. வீசி தரங்க கியாயமாவது - ஒரு பொய்கையின் நடுவில் ஒரு க்ல்லை எறியின் அதனால் ஓர் அலை தோன்ற, அதனின்று பிறிதொன்று தோன்றும். அவ்வாறே ஒன்றணிலொன்று தோன்றிக் கரைவரைக்கும் வரும்.