பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 237 புலாலை முகர்ந்துணர்ந்தனர். எனவே, இருதிறத்தாரும் முகர்க் துனரந்தது காற்றம் என்பது தெளிவு. இறக்துபட்ட வீரர்களை கினைந்து இாங்குபவர்க்கு முடிவில் அவர்பால் உண்டாவது உண்மைக் காதல் எண்ணமாகும். மிகக் கொடுமையான வீரக் குறிப்பில் உழல்வார்க்கு முடிவில் விளைவது காதலே; போர் முடிந்ததும் தலைவன் தன் தலைவியின்பால் காதல் கொண்டு வீடு திரும்பும் உண்மை இதனை வலியுறுத்தும். இங்ஙனமே, நெய்தல் கிலப்பயனை எற்பாட்டில் துகரும் தலைவிக்கும் தன் தலைவன்பால் முறுகிய காதல் உணர்ச்சி பெருகி எழுதல் இயற்கை எனவே ஊக்கமே தும்பை யொழுக்கம் என்றும், காதலே நெப்தல் உணர்ச்சி என்றும் உளங்கொள்க. காற்றின் பொருட்டியிற்சி ஊக்கம் என்றும் தும்பை புணர்ச்சியாய் துணுகி முகரும் செயலாதலால் காதல் என்னும் நெய்தல் உணர்ச்சியாய்ப் பின்னும் நுணுகி அகப்பொருளாகி உண்மைக் காதலர்க்கு இன்பம் விளைவித்தலை காம் உணர்தல் வேண்டும். வாகை X பாலை : இனி, வாகைப்புறம் தனக்கு இனமான பாலையகத்தோடு பொருந்துமாற்றைக் காண்டோம். வாகை யொழுக்கத்திற்கும் பாலையொழுக்கத்திற்கும் உரிய இடம் குறிஞ்சி முதலான கானிலத்துக்கும் இடுப்பட்ட வெறு நிலமாகும். இதுவே பாலை நிலமாகும். வெற்றியெய்திய அரசன் அவ்வெற்றித்தோற்றம் விளங்கும்படி கெய்தலை நீங்கி வழிப்பற்றுவான். இவன் பற்றி வரும் அவ்வழிகிலமே வெற்றிக்குரிய நிலமாகும். அது பாலை நிலம், அங்ங்னமே தலைவியைப் பிரிக்த தலைவனும் அல்லது தலைவி .ோடு உடன் போகும் தலைவனும் தமது பாலையொழுக்கத்தை நிகழத்தும் இடம் அவ்வழிநிலமே என்பது ஈண்டறிதற்பாலது. எனவே, இரண்டற்கும் உகிய நிலம்'பாலையாகும். பாலைக்குப் பொழுது, இளவேனிலும் கண்பகலும் ஆகும். தலைவன் கண்பகலில் தலைவியைப் பிசிக்து மணல் வெளியில் வழிச் செல்லுதலைப் போலவே, அரசனும் வாகையுடையனாப் வெயிலிலெல்லாம் வழியில் தங்கி, மாலையில் தலைவியை அடை கின்றான். வாகையரசன் முடியில் அணியும் வெற்றிப் பூ கொத்தான் வாகை யாகும் , அது பாலை கிலப்பூவாகும். பலைக்கு உரிப்பொருள் பிரிதல் தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் பிரிதல். வாகைத்தினையிலும் அரசன் கலந்து புரிந்து போரினின்றும் பகைவரைப் பிரிந்து நிற்றல் காண்க. எனவே, முதல் கரு உரிப்பொருள்களால் இரண்டு திணைகளும் இகைந்து கிற்றலை அறிக.