பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23# தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை இரண்டற்கும் உள்ள தொடர்பை இச்சினார்க்கினியர் கூறுமாறு : பாலைக்குப் புணர்ச்சியின் நீங்கி இல்லறம் கிகழ்த்திப் புகழெப்துதற்குப் பிரியுமாறு போலச் சுற்றத் தொடர்ச்சியின் நீங்கி அறப்போர் செய்து துறக்கம் பெறும் கருத்தினால் சேறலானும், வாளினும் தாளிலும் கிறையினும் பொறையினும் வென்றியெய்துவோரும் மனையோரை நீங்கிச் சேறலாலும் பிரிவுளதாயிற்று. பாலை தனக்கென ஒரு கிலகின்றி கால்வகை கிலத்தில் நிகழுமரதுபோல முற்கூறிய புறத்தினை கான்கும் இடமாக வாகைத்திணை நிகழ்தலின் தனக்கு கிலமின்றா பீற்று. நாளுக் காளும் ஆள்வினையழுங்க இல்லிருந்து மகிழ் வோர்க் கில்லையால் புகழ் (சிற்றெட்டகம்) என ஆள்வினைச் சிறப்புக் கூறிப் பிரியுமாறு போல இதற்குத் துறக்கமே எய்தும் ஆள்வினைச் சிறப்புக் கூறலும் கொளக. பாலை பெருவர விற்றாப்த் தொகைகளுள் வருமாறு போல வாகையும் பெருவர விற்றாப் வருதலும் கொள்க’** என்பது. இரண்டற்கும் உள்ள உறவினை மேலும் துணுகிக் காண்போம். பாலை கிலத்தின் தோறறம் வெட்ட வெளியே : அதனை 'வான்’ என்று வழங்குவர் அறிஞர். வானில் எல்லா துண்னனுக்களும் கலந்து கிற்றலின் வானியல்பைக் கலப்பு’ என வழங்கலாம். உருவுடைய அணுக்களாலான ஒவ்வொரு பொருளின் ஒவ்வோனுவினிடையிலும் வான் வெளியுள்ளதென்று (Ether) அணுவியலறிஞர் கூறுவர். வெற்றியடைந்த அரசனும் தோற்றவனுடன் பகை தீர்ந்து ஒற்றுமையாகக் கலந்து கிற்றலால் வாகையிலும் கலப்பு இருத்தலைக் காண்க. வானிடை அணுவும் அணுவிடை வெளியுமாக அ ை கலக் திருத்திலின், அணுக்கள் ஒன்றோடொன்று உராயுங்கால் ஓசை’ இவ்வெளியில் விளைகின்றது. எனவே, ஒகை பிறக்கும் இடம் வான்வெளியாகும். ஒசையை உணர்வது செவிப் பொறி, வாகைப் பேற்றை அரசனும் செவியினாலேயே அறிகின்றான். அஃதாவது, கண்டார் புகழ்ந்து கூறும் சொல்லோசைகள் அவன் காதிற்கு எட்டுகின்றன. பாலையொழுக்கத்திலும் தலைவி தன் தலைவனது பிரிவை அவன் கூறும் சொற்களாலும் தோழி முதலியோர் கூறும் சொற்களாலும் செவியினாற் கேட்டே அறிகின்றான். வாகையொழுக்கம் ஒழுகும் அரசனிடம் பாலைத்திணை யிலுள்ள தலைவனிடமும் அருள் என்னும் அரிய இயல்பு விளை கின்றது. வாகையரசன் தன்னால் அழிக்கப்பட்ட பகைவன்மீது 13. புறத்திணை - நூற். 18 - இன் உரை (நச்சி.)