பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாடு.விளக்கமும் தொகையும் 24. I

  • சத்துவம்’ எனப்படும். எனவே, சுவையின் இயல்பினை அறியு மிடத்து, காரண காரிய முறையாகச் சுவைக்கு நிலைக்களனாகிய பொருள், சுவை, குறிப்பு, விறல் என கானகு வகைப் பொருள் களை அறிகின்றோம்.2

அவைகளின் தொகை : காவாகிய பொறியினால் பெறும் அறுசுவைகள் போன்றனவாய், அவ்வொப்புமையான் வரும் சுவை யென்னும் பெயரினவாய், கட்பொறியானும் செவிப்பொறியானும் அறியப் பெறும் சுவைகள் - மெய்ப்பாடுகள் - எட்டாகும். அவை ககை, அழுகை, இழிவு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி உவகை என்பனவாகும். இந்த எட்டினையே தொல்காபபியம் குறிக் இன்றது. இங்ங்ணம் கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரப் பெறும் எண் சுவைகளும் சுவைக்கப்படும் பொருள், சுவை, குறிப்பு, விறல் என்ற வகைகளால் எண்ணான்கு முப்பத்திரண்டு ஆகும் என்பர். இவைபற்றி உரையாசிரியர்கள் தரும் விளக்கத்தைக் காண்போம். இளம்பூரணர் கூறுவது ‘பேயானும் புலியானும் கண்டா னொருவன் அஞ்சியவழி, மயக்கமும் கசத்தலும் நடுக்கமும் வியர்ப்பும் உளவாகின்றே. அவற்றுள் அச்சத்திற்கேதுவாகிய புலியும் பேயும் சுவைப்படு பொருள். அவற்றைக் கண்ட காலக் தொட்டு நீங்காது கினற அச்சம் சுவை அதன்கண், மயக்கமும் கரத்தலும் குறிப்பு. கடுக்கமும் வியர்ப்பும் சத்துவம். இவற்றுள் கடுக்கமும் வியர்ப்பும் பிறர்க்கும் புலனாவது என்று கொள்க, ஏனைய மன நிகழ்ச்சி.” பேராசிரியர் கூறுவது “சுவைக்கப்படும் பொருளும், அதனை துகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துட்பட்ட வழி உள்ளத்து கிகழும் குறிப்பும், குறிப்புகள் பிறந்த உள்ளத்தாற் கண்ணிர் அரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் முதலாக உடம்பின்கண் வருடி வேறுபாடாகிய சத்துவங்களுமென நான்காக்கி, அச்சுவை யேட்டோடுங்கூட்டி ஒன்று கான்கு செய்து உறழ, முப்பத் திரண்டாம் என்பது. எனவே, சுவைப்பொருளும், சுவையுணர்வும், குறிப்பும், விறலுமென கான்காயின. விறல் எனினும் சத்துவம் எனினும் ஒக்கும். பொறியுணர்வுகள் அவ்வச் சுவையெனப்படும்: 2. இங்ஙனம் இலக்கண நூலார் கூறும் சுவைக்கப்படும் பொருள், சுவை, குறிபபு, விறல் என்பவற்றையே உளவியலாளர் முறையே பொருள் (Object), புலன்காட்சி (Perception), பொது உணர்வு (அனுபவம்), உடல்நிலை மாறுபாடுகள் (Organic States) என்று கூறுவர். தொல் - 16