பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*等幕 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை ஸ்தாயி பாவம் (நிலை பேறுடைய பாவம்) எனப்படும். அது காதல், சோகம் முதலாக ஒன்பது வகைப்படும். உலகியலில உண்டாகும் காதல் முதலியவற்றிற்குக் காரணமாயும் காரிய மாயும் துணைக்காரணமாயும் இருப்பவை கவிஞனின் வாக்கிலும் கடிகனின் அபிநயத்திலும் அறிவிக்கப்படும்போது முறையே விபாவம் (விசேடித்துத் தோன்றியது) என்றும், அலுபாவம் (பின்னர்த் தோன்றியது) என்றும், சஞ்சாரி பாவம் (துணை செய்வதாகத் தோன்றியது-இது நிலைபேறில்லாத பாவம் என்றும் வழங்கப்படும். அஃதாவது : காரணம் - விபாவம் காரியம் - அனுபாவம் துணைக் காசனம் - சஞ்சாரியாவம் என்று வழங்கும். இவ்விபாவ அனுபாவங்களால் வெளிப்படுகின்ற ஸ்தாயி பாவமே ஏலம் என்னும் பெயர் பெறும். மேற்கூறிய விபாவம் இரண்டு வகைப்படும். காதல் முதலாயின தோன்றுவதற்குச் சார்பாயிருக்கும் பொருள் ஆலம்பன வியாவம் எனப்படும். தோன்றிய காதல் முதலியவற்றை வளர்த்து விளங்கச் செய்வது உத்திபன விபாவம் எனப்படும். காதலுக்குத் தலைவன் தலைவியர் ஆலம்பன விபாவம். அவர்களுடைய உருவின் சிறப்பு அணிகலன் முதலியனவும், தென்றல் கிலா கடலொலி முதலியனவும் உத்தீபன விபாவம். இனி, காரியமாகிய அனுபாவமும் இரண்டு வகைப்படும். ஒன்று, அகத்தது மற்றொன்று, புறத்தது, அந்தக் கரணத்தைச் சார்ந்தனவாகிய ஸ்தம்பம், பிரளயம் முதலியவை முதற்பிரிவிற்குரியவை. அவை சாத்விக பாவம் எனப்படும். கடைக்கண் கோக்குதல் முதலிய செய்கைகள் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவை. காதல் முதலிய ஸ்தாயி பாவங்களைத் துணைக் காரணமாய் கின்று வளர்க்கின்ற கலிவு, நினைவு, விரைவு முதலியன சஞ்சாரி பாவம் எனப்படும் ; இதனை வியபிசாரி பாவம் என்று கூறுதலும் உண்டு. இஃது அரசனைப் பின் தொடரும் ஏவலர் போலவும், கடலிற்பிறக்கும் அலைகள் போலவும் ஸ்தாயி பாவங்களைப் புலப்படுத்தி நிற்கும். எ - டு. துஷ்யந்தனுக்குச் சகுந்தலையும், சகுந்தலைக்குத் துஷ்யந்தனும் காதலுக்கு ஆலம்பனம். அக்காதல் தென்றல், நிலா, சோலை முதலிய உத்திபன விபாவங்களால் எழும்பப்பட்டு, கண்ணிர் வார்தல், கடைக்கண்ணோக்குதல் முதலிய காரியங்களால் அனுபவப்பட்டு, விரைவு, கினைவு முதலிய சஞ்சாரி பாவங்களால் வளர்க்கப்பட்டு மனத்தில் கிலைபெறுகின்றது.