பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை புகும் ஆசிரியன் வழக்கிலும் செய்யுளிலும் அம்மொழி நடைபெற்று வளரும் திறத்தினை ஆய்ந்துணர்தல் வேண்டும். வழக்காவதுகற்றார் கல்லாதவர் என்ற வேறுபாடின்றி எல்லா மக்களும் பொரு ளுணர்ந்து பேசுமாறு எளிய சொற்களாலாகிய மொழிகடை , அஃதாவது, மக்களிடையே அன்றாட வாழ்வில் நிலவும் மொழி. இவ்வழக்கியல் மொழியில் மக்களிடையே பலமுறையும் பழகி உருவிழந்து மெருகேறிய சொற்கள் இருக்கும்; தொல்காப்பியர் இம் மொழியினைச் சேரி மொழி என்று குறிப்பர். செய்யுளாவது, மேற்கூறிய வழக்கியல் மொழியினை அடிப்படையாகக்கொண்டு உணர்வினில் வல்ல புலவன் ஒருவன் திருந்திய சொற்களால் சீர்வகை யமையத் தான் கருதிய பொருளைத் திட்பதுட்பம் செறியச் சுவைபெறப் பாடும் சொன்னடையாகும். இதனைத் தொல்காப்பியர் செய்யுள் மொழி என்பர். தொல்காப்பியர் இந்த இருவகை மொழியினையும் நன்கு ஆப்க்தார். இரண்டிலும் பயின்றுவந்த எழுத்திலக்கணத்தையும், சொல்லிலக்கணத்தையும், பொருளிலக்கணத்தையும் ஆப்ந்தார்; நூல் மரபுகள், மொழி மரபுகள், சொற்றொடர் மரபுகள் போன்ற குறிப்புகள் யாவற்றையும் தொகுத்தார். இக்கருத்துகள் யாவற்றையும் முறைப்பட வகுத்துத் தம் நூலில் நிரல்பட அமைத் தார். இச்செய்தியைப் பனம்பாசனார், வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் காடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய கிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி புலக்தொகுத் தோனே போக்கறு பனுவல் (சிவணிய - பொருந்திய முந்து நூல் - முன்னை இலக்கணங்கள் : காடி - ஆப்ந்து.1 என்று குறிப்பிடுவர். இந்த அடிகளினால் இலக்கணத்தின் உண்மை வடிவம் இன்னதென்பது தெளிவாகின்றது. தொல்காப்பியர் ஏற்கெனவே மக்களிடையே வழங்கி வந்த தமிழின் அழகுகளையும் இலக்கியத்தின் தன்மைகளையும் ஒருசேரத் தொகுத்து முறைப்பட வகுத்தார் : அவ்வளவுதான். அப்படித் தொகுத்தும் வகுத்தும் அமைத்த போக்கறு பனுவல் தான் தொல்காப்பியம். அவர் இலக்கணத்தைப் புதிதாகப் படைக்கவில்லை : அந்நூலிலுள்ள சோல்லமைப்புகள் - நூற்பாக்கள் - மாத்திரம் அவருடைய சொக்தச் சரக்குகள் நூற்பாக்கள் குறிப்பிடும் செய்திகள் யாவும் அவருக்கு முன்பே உலக வழக்கிலும் நூல் வழிக்கிலும் இருந்து