பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதிணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 265 (ச) ஆக்கம்பற்றிய மருட்கை (அ) தன் கண் தோன்றிய ஆக்கம்பற்றிய மருட்கை: நரிவெரூஉத் தலையார் என்ற புலவர் தன் உடம்பு வேறு பட்டிருந்தவர். அவர், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட நாளில் அவ்வேறுபாடு நீங்கி முன்னை கல்லுருப் பெற்றனர். இஃது ஆக்கம். இங்ங்ணம் ஆக்கம் பெற்ற காலை விபத்து. அவ்வரசனைப் பாடி வாழ்த்தினார். எருமை யன்ன கருங்கல் இடைதோறு ஆணிற் பரக்கும் யானைய முன்பின் காணக நாடனை நீயோ பெரும : (முன்பு - வலி) என்ற புறப்பாட்டடிகளில் (புறம் - 5) அப்புலவர் தன்கண் தோன்றிய ஆக்கம் பற்றி மருட்கை எய்தி அரசனை வாழ்த்து தலை அறிக. (ஆ) பிற பொருளின்கண் தோன்றிய ஆக்கம்பற்றிய மருட்கை. ஆலம் வித்து மிகச் சிறியது. அது முளைத்தெழுக்து பெருமரமாகி மிக்க கிழலைப் பயக்கின்றது. அக்த ஆக்கத்தைக் கண்டு ஒருவர் வியக்கின்றார். 'உறக்குங் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்பு கிழற்பயந் தாஅங்கு" என்ற காலடியாரில் (நாலடி. 38) ஆலம் வித்தாய பிற பொருளின் ஆக்கம் கண்டார் ஒருவர் வியந்தவாறு காண்க. 5. அச்சம் அச்சம் என்பது, பயம். அச்சத்தின் இயல்பினைத் தொல்காப்பியர், அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் கான்கே.7 என்ற விதியால் கூறுவர். அணங்காவன : எதிர்ப்பட்டாரை வருத்தும் இயல்பினவாகிய பேய் பூதம் முதலியன. விலங். 7. மெய்ப் - நூற். 8 (இளம்).