பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #2 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பொருள் என்றும், அதனது இயல்பினை விளக்குவதற்கு ஒப்புமையாக எடுத்துக் காட்டப்படும் பிற பொருள் உவமை என்றும் வழங்கப்பெறும். வட நூலார் இவ்விரண்டனையும் முறையே உபமேயம் என்றும், உப மானம் என்றும் வழங்குவர். உவமையும் பொருளும் ஆகிய இவ்விரு. பொருளின் கண்ணும் ஒத்தமைந்த வண்ணம், வடிவு, தொழில், பயன் என்பன பற்றியமைக்த ஒப்புமைத் தன்மை பொதுத்தன்மை’ என்று வழங்கப்பெறும். அத்தன்மையினை விளக்குவதற்பொருட்டு அன்ன, ஆங்க, போல, புரைய என்பன போன்ற அவற்றைச் சார்ந்து வரும் இடைச்சொற்கள் உவம உருபு எனப்படும். இங்ங்ணம் உவமையும் பொருளும் அவற்றிடையே அமைந்த பொதுத்தன்மை பும் ஆகிய இவை இன்னவென வெளிப்படையாக உணர்தற்கேற்ற சோல் நடையினையுடையது ஏனை யுவமம் எனப்படும். உவமை விகற்பம் : ஒரு பொருளை ஒரு பொருட்கு உவமை பாகக் கூறுங்கால் அவ்விரண்டற்கும் பொதுவாகியதொரு தொழில் காரணமாகவும், அத்தொழிலாற்பெறும் பயன் காரணமாகவும், மெய்யாகிய வடிவு காரணமாகவும், மெய்யின்கண் கிலைபெற்றுத் தோன்றும் உருவாகிய வண்ணங் காரணமாகவும் ஒப்பிட்டு உரைக் கப்பெறும். இதனை ஆசிரியர் தொல்காப்பியனார், வினைபயன் மெய் உரு என்ற நான் கே வகைபெற வக்த உவமத் தோற்றம்.8 என்று விதி செய்து காட்டுவர். அஃதாவது, வினையுவமம், பயனு: வமம், மெய்யுவடிம், உருவுவமம் என்று பெயர் கூறப்படும். வினை பாற் கிடைப்பது பயனாதலின், வினையின் பின்னர்ப் பயன் வைக் கப்பட்டது , அங்ங்னமே, மெய்யின்கண் புலப்பட்டுத் தோன்றுவது சிறமாதலின், மெய்யின் பின்னர் உரு வைக்கப்பட்டது. வடிவும் வண்ணமும் பண்பென ஒன்றாக அடங்குமாயினும் கட்புலனாம் பண்பும், உற்றுணரும் பண்பும் எனத் தம்முள் வேறாகல் நோக்கி மெய்யினையும் உருவினையும் வேறு பிரித்துரைத்தார் ஆசிரியர். மேய்யாகிய வடிவனை இருட்டிலும் கையினால் தொட்டறிதல் கூடும்; வண்ணமாயின் அவ்வாறு தொட்டறிந்துகொள்ள இயலாது. சில எடுத்துக்காட்டுகள் மேற்கூறிய உவம வகைகளைத் தெளிவாக்கும். புலியன்ன மறவன்' என்பது, புலி பாயுமாறு போலப் பாய்வான் எனத் தொழில்பற்றி ஒப்பித்தமையின் வினை புவமம் ஆயிற்று. மாரியன்ன வண்கை' என்பது மாரியால் விளைக் T3 உவமயில்- நாற். (இளம்)