பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 Í 5 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கூறுவார், இராகு என்னும் பாம்பினால் விழுங்கப்பட்டு ஒளியிழந்த திங்களை அதற்கு உவமை கூறினமையின், இது கிழக்கிடு பொருள் கிலைக்களமாகப் பிறந்த உவமை என்பதை அறிக. சில மரபுகள் : உவமை கூறுங்கால் முதலும் சினையும் எனக் கூறப்படும் இருவகைப் பொருள்களுக்கும் கருதிய மரபினால் அவ்வவற்றிற்கு ஏற்றவை உவமையாப் வருதற்கு உரியன: அஃதாவது, முதலொடு முதலும், சினையொடு சினையும, முதலொடு சினையும், சினையொடு முதலும் வேண்டியவாற்றான் உவமஞ் செய்தற்கு உரியன ; அங்ஙனம் செய்யுங்கால் மரபு பிறழாமற் செய்ய வேண்டும். இதனை, முதலுஞ் சினையுமென் றாயிரு பொருட்கு துதலிய மரபின் உரியவை உரியன8 என்ற விதியினால் கூறுவர் ஆசிரியர். சில எடுத்துக்காட்டுகள் இக்கருத்தினைத் தெளிவாக்கும். "ஒருகுழை யவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்’ என்பதில் (கலி. 26) முதற்பொருளுக்கு முதற்பொருள் உவம மாயிற்று.

  • தாமரை புரையும் காமர் சேவடி’

என்பதில் (குறுங் - கடவுள்) சினைக்குச் சினையே வந்து உவமையானதைக் காண்க. 'அடைமரை பாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுகின் செம்மலைக் காணு உ’ என்பதில் (கலி. 84) முதற்பொருளுக்குச் சினைப்பொருள் உவமையாயிற்று. ைேருப்பின் அன்ன சிறுகட் பன்றி: என்பதில் (அகம், 84) சினைப்பொருளோடு முதற்பொருள் உவமையாக வந்தது. இங்ங்ணம் மரபு பிறழாது உவமஞ் செய்யப்படும் என்று கூறுவர் பேராசிரியர். 8. உவம-நூற். 6 (இளம்.)