பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 fé。 தோல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்ற சிறுபாணாற்றுப்படையடிகளில் (அடி 72-3), வருமுலையும் திருமுகமும் உவமையாகி முகையும் பூவும் பொருளாயின. முலையும் முகமும் உயர்ந்தனவாகச் செய்தமையின், அவை உவமமாகுங்காலும் உயர்த்தனவாயின. மேலும், பெருமையும் சிறுமையும் பற்றி உவமங் கூறுங்கால் உலக வழிக்கினைக் கடக்து இன்னாவாகச் செய்யாது சிறப்புடைமையில் நீங்காது கேட்டோர் மனங்கொள்ளும் படி செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தற்கு வழக்கே அளவு கோலாகும். அவாம்போ லகன்றதன் அல்குல்மேற் சான்றோர் உசாஅப்போல உண்டே மருங்குல்.’ என்றதில் அல்குல் பெரிதென்பான் ஆசையோடு உவமித், தலின் இது தக்கதாயிற்று : மருங்குல் நுண்ணிதென்பான் சான்றோர் உசாவோடு (ஆராய்ச்சியுடன், அதுவும் தக்க தாயிற்று. முன்னது கழிபெரும் பரப்பிற்றாகவும், பின்னது கழியச் சிறியதாகவும் உவயிக்கப்பட்டன : இரண்டும் சிறப்புப் பற்றியே வந்தன. - உவம உருபுகள்: உவமத்தினையும் பொருளினையும் ஒப்புமை காட்டி இயைத்துரைக்குங்கால் அவற்றின் இடையே வரும் சொல்லாகிய உவம உருபுகள் அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்டி, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள விழைய, இறப்ப, கிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, களிய, கடுங்க, நந்த, ஒட, புரைய என வரும் முப்பத்தாறும் அவை போல்வன பிறவுமாகிப் பல்வேறு குறிப்பின வாப் வரும் என்பர் ஆசிரியர், ே இதன் கண் பிறவும் என்றதனால், இங்குச் சொல்லப்படாத கோக்க, கேர, அனைய, அற்று, இன். எந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர, துணைப்ப, மலைய, ஆர அமர முதலிய பிறவுருபுகளும், ஐக்தாம் வேற்றுமைப் பொருள்பற்றி வருவனவும், எனவென்னெச்சங்கள் பற்றி வருவனவும் ஆகிய உவம வுருபுகள் எல்லாம் தழுவிக்கொள்ளப்பட்டன. புலி போன்ற சாத்தன்", புலிபோலுஞ் சாத்தன்' எனப் பெயரெச்சமாகவும்: புலி போன்று வந்தான்", புலி போலப் பாய்ந்தான்’ என வினையெச்சமாகவும் : சாத்தன் புலி போலும், சாத்தன் புலி போன்றனன்’ என வினை முற்றாகவும் : அன்ன, இன்ன என இடைச்சொல்லாக்வும் : தேன் 10. உவம.-துரற். 11 (இளம்.)