பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 - தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்ற திருக்குறளடியில் மூவசையினாற் சீராகி அவ்வளவினால் ஒசைபற்று கின்றவாறும் காணலாம். இவண் கூறப்பெற்ற அசைகளில் இயலசை மயங்கி வந்தன. இயற்சீர் என்றும், உரியசை மயங்கி வந்தன ஆசிரியவுரிச்சீர் என்றும் வழங்கப்பெறும் என்று கூறுவர் தொல்காப்பியர்.9 மயங்குதலாவது, ஒருங்கு வருதல். ஓரசைச் சீர் நான்கு, ஈரசைச் சீர் பதினாறு, மூவசைச்சீர் அறுபத்து நான்கு ஆகச் சீர் எண்பத்து கான் கில் அசைச்சீர் நான்கெனவும், அது தளை வழங்கும் வழி இயற்சீர் ஒக்குமெனவும் ; ஈரசைச்சீர் பதினாறிலும் சிறப்புடைய இயற்சீர் கான்கும் சிறப்பிலியற்சீர் ஆறும் எனப் பத்தாமெனவும்: ஆசிரியவுரிச்சீர் ஆறு எனவும் ; மூவசைச்சீர் அறுபத்துநான்கில் வெண்பாவுரிச்சீர் நான் கெனவும் ஏனைய அறுபதும் வஞ்சியுரிச் சீர் எனவும் செய்யுளியல் 11 முதல் 30 முடியவுள்ள நூற்பாக்களில் ஒதுவர் ஆசிரியர். இவற்றின் செய்திகளை ஈண்டு விரிக்கிற் பெருகும் 5. அடி : சீர் இரண்டும் பலவும் தொடர்ந்து ஆவதோர் உறுப்பு அடியெனப்படும். அடியென்று சிறப்பித்துச் சொல்லப் படுவது காற்சீரடியே என்பது ஆசிரியர் கொள்கை. 'நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே”19 என்ற நூற்பாவால் இதனை அறியலாம். இருசீராலும் முச் சீராலும் ஐஞ்சிராலும் அறுசீர் முதலியவற்றாலும் இயன்று வரும் அடிகள் பலவுளவாயினும் அவை அத்துணைச் சிறப்பில என்பது ஆசிரியரின் கருத்து. அங்காற்சீரடி இரண்டும் பலவும் தொடர்ந்து வருவதே பாட்டாகும் என்பது ஆசிரியரின் கொள்கை, அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே' என்ற ஆசிரியரின் விதியால் இதனை அறியலாம். இதனால் பண்டைச் செய்யுள்கள் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்ற யாப்பில் இம்முறைப்படியே அமைந்திருந்தன என்பது உணரப் பெறும். பேராசிரியரும், "தலை யிடை கடைச்சங்கத்தாரும் பிற சான்றோரும், நாற்சீரடியான் வரும் ஆசிரியமும் வெண்பாவும் கலியுமே பெரும்பான்மையும் செய்தார் ; வஞ்சிப்பா சிறு வரவிற்றா மெனக் கொள்க' என்று கூறிப்போதல் கோக்கத்தக்கது. 9. செய்யு. - நூற். 12 (இளம்.) 10. டிை - நூற. 31 (இளம்.) 11. ை- நூற். 34 (இளம்). 12. ை- 35 - இன் உரை (பேரா).